Published:Updated:

Covid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்?

Covid Questions
News
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:

Covid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions
News
Covid Questions ( AP Illustration/Peter Hamlin )

காய்கறிகளையும் பழங்களையும் குழாய்த் தண்ணீரில் அலசிப் பயன்படுத்தினாலே போதுமானது என்று இந்தப் பகுதியில் ஒரு மருத்துவர் சொல்லியிருந்ததைப் படித்தேன். கோவிட் தொற்றுள்ள ஒரு நபர் இருமினாலோ, தும்மினாலோ, அந்தப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் இருந்தாலோ வைரஸ் தொற்றானது எத்தனை மணி நேரத்துக்கு அங்கே உயிர்ப்புடன் இருக்கும்?

- ரங்கன் ( விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``கோவிட் தொற்றுக்குக் காரணமான வைரஸானது நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம்தான் பரவுகிறது. தொடும் பரப்புகளின் மூலம் தொற்று பரவும் என்பது அசாதாரணமானது.

ஆனாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. காய்கறிகள், பழங்கள் மூலம் தொற்று பரவும் என்பதற்கோ, வைரஸானது எத்தனை மணி நேரம் அவற்றில் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரபூர்வ தகவல்களும் இல்லை. நீங்கள் படித்தது சரியானதுதான். காய்கறிகள், பழங்களை சாதாரண குழாய்த் தண்ணீரில் கழுவிப் பயன்படுத்துவதே போதுமானதுதான்.

Fruits
Fruits

அவற்றின் மீது சோப்போ, சானிட்டைஸரோ பயன்படுத்தாதீர்கள். காய்கறிகள், பழங்களைக் கையாள்வதற்கு முன்பும் பிறகும் உங்கள் கைகளை நன்றாகக் கழுவவும் மறக்காதீர்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!