Published:Updated:

Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?

corona virus
corona virus ( Pixabay )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு அது பரவுமா?

- ஒசாலி கேத்லின் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது என்றால் அந்த வைரஸ் அவர் உடலுக்குள் போய்விட்டது என்று அர்த்தம். அந்த வைரஸ் உள்ளே போய் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த உடலுக்குள் சேதங்களை ஏற்படுத்தப் பார்க்கும்.

சில நேரம், நம்முடைய இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் அந்த வைரஸ் நம் உடலைப் பெரிய அளவில் பாதிக்காமல் பாதுகாக்கும். அப்போது அந்த வைரஸ் செயலிழந்து போகும். செயலிழந்த அந்த வைரஸ் உடலைவிட்டு வெளியே வரவோ, அடுத்தவருக்குத் தொற்றவோ வாய்ப்புகள் கிடையாது. ஆனால் வைரஸ் உடலுக்குள் புகுந்த முதல் ஐந்து- ஆறு நாள்களான `இன்ஃபெக்டிவ் ஸ்டேஜ்' எனப்படும் காலத்தில் தொற்று பாதித்தவரிடமிருந்து இன்னொருவருக்கும் அது பரவும்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
Covid Questions: உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா?

ஆனால் தொற்றுக்குள்ளான நபர், முழுமையான சிகிச்சையின் மூலம் குணமான பிறகு அவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவது அரிதினும் அரிது. ஒருவேளை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதை வெளியே சொல்லாமல், க்வாரன்டீனில் இல்லாமல், அறிகுறிகளை அலட்சியப்படுத்தியும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கும் பரவும். தொற்று வந்து சிகிச்சை எடுப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு க்வாரன்டீனில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரிடமிருந்து அவரின் குடும்ப நபர்கள் உள்ளிட்ட யாருக்கும் தொற்று பரவாமலிருக்கும்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
அடுத்த கட்டுரைக்கு