Published:Updated:

Doctor Vikatan: 3-வது டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு அதிகரித்துள்ள இதயத்துடிப்பு; தடுப்பூசிதான் காரணமா?

Covid-19 Vaccine ( AP Photo )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: 3-வது டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு அதிகரித்துள்ள இதயத்துடிப்பு; தடுப்பூசிதான் காரணமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Covid-19 Vaccine ( AP Photo )

என் வயது 77. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். மூன்று டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுவிட்டேன். மூன்றாவது டோஸுக்குப் பிறகு, சில நேரங்களில் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதை உணர்கிறேன். மேலும், செவித்திறனும் மிகவும் குறைந்துவிட்டது. மூன்றாவது டோஸ் போட்டதன் விளைவுகள்தான் இவையெல்லாம் என்கிறார் நண்பர். இது உண்மையா?

- ராமகிருஷ்ணன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.

``நீங்கள் குறிப்பிட்ட எதுவுமே தடுப்பூசியின் பின் விளைவுகளாக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தீர்களா என்ற விவரம் இல்லை. ஒருவேளை தொற்று பாதித்திருந்தால், தொற்றிலிருந்து குணமானவர்களைப் பாதிக்கும் போஸ்ட் கோவிட் பாதிப்பாகவும் இது இருக்கக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செவித்திறன் குறைவதாகக் குறிப்பிட்டுள்ளதற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் உடனடியாக இ.என்.டி மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். முதுமையின் காரணமாகப் பலருக்கும் காதுகேட்கும் திறன் குறைவது இயல்புதான்.

Covid Vaccination
Covid Vaccination
AP Photo/Altaf Qadri

இதயத்துடிப்பு அதிகரித்திருப்பதற்கு முதுமையில் ஏற்படும் அரித்மியா (arrhythmias) என்ற பாதிப்பும் காரணமாக இருக்கலாம். அதுதானா அல்லது உங்களுக்கு இதயம் தொடர்பாக வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் இதயநோய் மருத்துவரை அணுகி, தெளிவு பெறுங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத்தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism