Published:Updated:

Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு உடலுறவில் திருப்தியில்லை; என் அச்சம் சரியா?

Representational Image ( AP Photo / Mahesh Kumar A )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகு உடலுறவில் திருப்தியில்லை; என் அச்சம் சரியா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
Representational Image ( AP Photo / Mahesh Kumar A )

எனக்கு மார்ச் 31-ம் தேதி திருமணம் ஆனது. நான் அப்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை... திருமணம் ஆகி ஒரு மாதம் கழித்தே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்... திருமணத்துக்குப் பிறகு, உடலுறவு திருப்திகரமானதாகவே இருந்தது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய பிறகு எனக்கு விரைப்புத் தன்மை குறைவாகவே இருக்கிறது. முன்பு போல உடலுறவு சிறப்பாக இல்லை. என் மனைவி கர்ப்பம் தரிப்பதும் தள்ளிப்போகிறது. இந்தப் பாதிப்பு தற்காலிகமானதுதானா அல்லது தடுப்பூசியால் உருவான பக்கவிளைவாக இருக்குமா?

- பாண்டிதுரை (விகடன் இணையதளத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``கோவிட் தொற்றுக்கும் ஆண் மலட்டுத்தன்மைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக இதுவரை எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

கோவிட் தொற்றானது உயிரணுக்கள் உற்பத்திக்குத் தேவையான ஆண் ஹார்மோன்களைக் குறைக்கக்கூடும். தவிர, அந்தத் தொற்று ஏற்படுத்தும் வீக்கத்தின் காரணமாக விதைப்பைகளில் வலியும் ஏற்படலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

mRna தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பும் பிறகுமான மாற்றங்களைக் கண்டுபிடிக்க சில ஆண்கள் மத்தியில் சிறு ஆய்வு நடத்தப்பட்டது. உயிரணுக்கள் உற்பத்தியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கின்றனவா என ஆய்வு செய்யப்பட்டது. உயிரணுக்கள் உற்பத்திக்கு பொதுவாக 64 முதல் 72 நாள்கள் ஆகும். அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஆண்களின் உயிரணு உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் காய்ச்சல் போன்ற சிறிய விளைவுகள் காரணமா, 16 சதவிகித ஆண்களின் உயிரணு எண்ணிக்கை தற்காலிகமாகக் குறைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Couple (Representational image)
Couple (Representational image)
Pexels

கோவிட் தடுப்பூசியால் ஆணுறுப்பு விரைப்புத்தன்மை பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது.

இப்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசியும் அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அப்படிச் சொல்லப்படுவது ஒரு வதந்தி. தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தக்கூடியது. எந்தத் தடுப்பூசியிலும் விரைப்புத்தன்மையைப் பாதிக்கும் எந்தச் சேர்க்கையும் இருப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது உளவியல் தொடர்பான ஒரு பிரச்னை. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் அந்தக் கவலை இருக்கிறது. கோவிட் தடுப்பூசிகள் ஆண்மைக் குறைபாட்டுக்கோ மலட்டுத் தன்மைக்கோ காரணமாவதில்லை என டிரக் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மற்றும் உலக சுகாதார நிறுவனம் இரண்டும் அறிவித்துள்ளன.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin

ஒருவேளை கோவிட் தடுப்பூசிகள் விரைப்புத்தன்மையைப் பாதிக்கலாம் என சிறிய சந்தேகம் எழுந்தாலும் தடுப்பூசிகள் போடப்படாது. ஆனால், கோவிட் தொற்றினால் விரைப்புத்தன்மை பாதிக்கப்படலாம். எனவே, கோவிட் நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்கவும் தொற்று ஏற்படுவதால் விரைப்புத்தன்மை பாதிப்பைத் தவிர்க்கவும் தடுப்பூசி அவசியம். அதிலும் குறிப்பாக, கருத்தரிக்க விரும்புவோருக்கு அது மிக முக்கியம். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் தற்காலிகப் பாதிப்புகளான காய்ச்சல், களைப்பு போன்றவைகூட மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைத் தற்காலிகமாக ஏற்படுத்தலாம். தற்காலிக பாதிப்பு என்பதால் அது குறித்த பயம் தேவையில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism