Published:Updated:

Doctor Vikatan: சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?

அவல்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
அவல்

அவல் சாப்பிடுவது வெயிட்லாஸுக்கு உதவுமா? இன்று ராகி அவல், கம்பு அவல் என விதம்விதமான அவல் கிடைக்கிறது. அதைச் சமைக்காமல் சாப்பிடுவது பலன் தருமா?

- ஷீதல் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``அவல் சாப்பிடுவது எடைக்குறைப்புக்கு நிச்சயம் உதவாது. ஏனென்றால், 100 கிராம் சாதாரண அவலில் 77 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் மட்டும்தான் உள்ளது. சிவப்பு அவல் அல்லது சிறுதானிய அவல் சாப்பிடுவதாக இருந்தால், ஒரு கப் அவலுக்கு, 3 கப் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம். கூடவே புரதச்சத்துக்குத் தேவையான வேர்க்கடலையை வறுத்து முழுதாகவோ, பொடித்தோ அதில் சேர்க்கலாம். இப்படிச் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல ஆற்றலைத் தருமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமைககாத அவலிலும் அதே அளவு கார்போஹைட்ரேட்தான் இருக்கும் என்பதால் சமைத்த அவலுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வளரும் குழந்தைகளுக்கு அவல் கொடுக்கலாம். அவலை வறுத்து, வேர்க்கடலை அல்லது நட்ஸ் சேர்த்து நொறுக்குத்தீனியாகக் கொடுக்கலாம். கெட்டி அவலை 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்துகொள்ளவும். அதில் துருவிய தேங்காயும், வெல்லத்தூளும், ஏலக்காய் தூளும் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ரத்தச்சோகையைப் போக்கும் என்பதால் டீன ஏஜ் பெண்களுக்கும் இது அற்புதமான உணவு.

அவல்
அவல்

மற்றபடி சாதாரண அவலோ, சிறுதானிய அவலோ.... எதுவும் எடைக்குறைப்புக்கு உதவாது. கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்களுக்கும் அது ஏற்றதல்ல."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?