Published:Updated:

Covid Questions: 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; என்னிடம் இருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவுமா?

COVID-19 vaccine ( AP Photo/Steven Senne )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid Questions: 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்; என்னிடம் இருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவுமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:
COVID-19 vaccine ( AP Photo/Steven Senne )

நான் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டேன். இனிமேலும் நான் மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்புவேனா? நான் இனிமேல் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவன்தானே...?

- ராகுல் (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

``இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வதன் மூலம் நீங்கள் கோவிட் தொற்றே வராமல் காப்பாற்றப்பட்டுவிட்டதாக அர்த்தமில்லை. உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொள்கிறீர்கள்... அவ்வளவே.. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் கோவிட் தொற்று வரக்கூடும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று வந்தால், அது அவர்களுக்குத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மரணம் நிகழும் வாய்ப்புகளும் வெகுவாகக் குறையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் தொற்று வரலாம். அவர்கள் அடுத்தவர்களுக்கு தொற்றைப் பரப்பலாம். அந்தத் தொற்றின் தீவிரம் தடுப்பூசி போடாதவர்களை பாதிப்பதைவிட குறைவாக இருக்கும்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Matt Slocum

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உங்களை 100 சதவிகித பாதுகாப்பானவராக நினைத்து அலட்சியமாக இருக்காதீர்கள். மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது என கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிதான் ஆக வேண்டும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism