Published:Updated:

Doctor Vikatan: இளம் பெண்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்; திருமணமானால் சரியாகிவிடுமா?

Sanitary Napkin (Representational Image)
News
Sanitary Napkin (Representational Image) ( Image by burin kul from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: இளம் பெண்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்; திருமணமானால் சரியாகிவிடுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sanitary Napkin (Representational Image)
News
Sanitary Napkin (Representational Image) ( Image by burin kul from Pixabay )

என் மகளுக்கு 18 வயது. பீரியட்ஸ் ரெகுலராக வருவதில்லை. திருமணம்வரை அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள். அப்படியே விட்டுவிடலாமா அல்லது சிகிச்சை தேவைப்படுமா?

- பிரேமா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

``18 வயதுப் பெண்ணுக்கு பீரியட்ஸ் சுழற்சி சரியாக இல்லையென்றால் நீங்கள் அவசியம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெற வேண்டும். இன்று பெரும்பாலான பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம். பீரியட்ஸ் சுழற்சி சரியாக இல்லாதது பிசிஓடி பிரச்னையின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று. அதை ஆரம்பத்திலேயே பார்த்து சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்லது.

முறையற்ற பீரியட்ஸ் பிரச்னையை சரிசெய்ய ஹார்மோன் மாத்திரைகள் தேவைப்படுமோ என்று பயப்பட வேண்டாம். உங்கள் மகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதைப் பாருங்கள். ஒருவேளை அது அதிகமாக இருந்தாலும் பீரியட்ஸ் முறைதவறி வர வாய்ப்புகள் உண்டு.

Sanitary Napkin
Sanitary Napkin
Pixabay

இதுபோல வேறெந்தக் காரணங்களால் பீரியட்ஸ் முறைதவறி வருகிறது என்பதை மருத்துவரால்தான் சரியாகச் சொல்ல முடியும். எனவே, கல்யாணமானால் எல்லாம் சரியாகிவிடும் என்ற அந்தக் கால நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரச்னையை அலட்சியமாக அணுகாதீர்கள். இப்போதே இந்தப் பிரச்னைக்கான காரணம் அறிந்து சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?