Published:Updated:

Doctor Vikatan: கொழுப்புக்கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

Cancer -Representational Image ( Photo by Conscious Design on Unsplash )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கொழுப்புக்கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Cancer -Representational Image ( Photo by Conscious Design on Unsplash )

என் வயது 40. வயிற்றில் கட்டி மாதிரி உருள்கிறது. புற்றுநோயாக இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரை அணுகினேன். அது கொழுப்புக்கட்டி, ஒன்றும் செய்யாது என்றார். அது ஏன் வருகிறது?ஆபத்தில்லாததா?

- கீர்த்தி (விகடன் இணையத்திலிருந்து)

பி.செந்தில்நாதன்
பி.செந்தில்நாதன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.

`` `லைப்போமா' (Lipoma) எனப்படும் கொழுப்புக்கட்டிகள் இந்தக் காரணத்தால்தான் வருகின்றன என எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். சருமத்துக்கு அடியில் சிறிய கட்டி போல வரும். அழுத்திப் பார்த்தால் மென்மையாத் தெரியும். இந்தக் கொழுப்புக் கட்டிகள், கை, கால், முதுகு, வயிறு என எங்கேயும் வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கென பிரத்யேக சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஒரு மருத்துவரைச் சந்தித்து, அது கொழுப்புக் கட்டிதான் என உறுதிப்படுத்திக் கொண்டால் போதும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருவேளை இந்தக் கட்டி, வளர்ந்துகொண்டே போனாலோ, முகம், கைகள் என அடுத்தவர் பார்க்கும்படி உறுத்தலான இடங்களில் இருந்தாலோ அல்லது மூட்டு இணைப்புகளுக்குப் பக்கத்தில் கட்டி இருந்து, வேலை செய்ய முடியாமல் இருந்தாலோ அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றுவோம். அரிதான சூழல்களில் அது. எந்த மாதிரியான கட்டி என்று தெரியாவிட்டாலும் ஆபரேஷன் செய்வோம்.

Cancer
Cancer
Photo by Miguel Á. Padriñán from Pexels

வழக்கமாக இந்தக் கொழுப்புக் கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக மாறாது. சிலருக்கு உடலில் பல இடங்களிலும் இந்தக் கட்டிகள் வரலாம். அதுவும் பயப்பட வேண்டிய விஷயமல்ல. அதற்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை, கவனிப்பு மட்டுமே போதும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?