Election bannerElection banner
Published:Updated:

கோவிட்-19 வைரஸிடமிருந்து காக்குமா மௌத்வாஷ்...? -விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

மௌத்வாஷ்
மௌத்வாஷ்

கொரோனா வைரஸின் லிப்பிட் படலத்தை மௌத்வாஷ்கள் கொண்டு தகர்க்க முடியுமா?

கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளோம். இந்த வரிசையில் மௌத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிக்கும் பழக்கமும் நம்மைக் காத்துக்கொள்ள உதவுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிட் 19
கோவிட் 19
உலக சுகாதார நிறுவனம், கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மௌத் வாஷ் உதவாது என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், வேல்ஸின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு, தற்போது தயாரிக்கப்பட்டு வரும் மௌத்வாஷின் வைரஸ் எதிர்ப்புத் திறன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து, மௌத்வாஷில் எத்தனால், போவிடோன்-அயோடின் மற்றும் செட்டில்பிரிடினியம் போன்ற பல ரசாயனங்கள் சேர்க்கப்படும். அவை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டவை.

மௌத்வாஷ்
மௌத்வாஷ்
பேக்கரி உணவுகளை உட்கொள்ள வேண்டாம்... வைரலாகும் போலித் தகவல்! - மறுக்கும் உலக சுகாதார நிறுவனம்

பாக்டீரியாக்களின் மேல் லிப்பிட் எனப்படும் சவ்வு வெளிப்படலம் காணப்படும். மெத்வாஷ்களில் காணப்படும் வேதியியல் பொருள்கள், பாக்டீரியாக்களின் வெளிப்படலத்தை அரித்து அவற்றை கொல்லக்கூடியவை. வைரஸ்களிலும் அதே மாதிரியான லிப்பிட் வெளிப்படலம் காணப்படுவதால், மனிதனின் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் இருக்கும் சார்ஸ் வகையான வைரஸ்களையும் மௌத்வாஷால் அழிக்க முடியுமா என அறிந்துகொள்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினர்.

ஆராய்ச்சியில், மௌத்வாஷுக்கு வைரஸை எதிர்த்துப் போராடும் தன்மை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்துப் பேசிய பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ஓ'டோனெல், `சோதனைக் குழாய் சோதனைகள் மற்றும் சில மருத்துவ ஆய்வுகளில், குறிப்பிட்ட மௌத்வாஷ்களில் வைரஸ்களின் லிப்பிட்களை திறம்பட அழித்து, அவற்றைக் கொல்லப் போதுமான வைரஸ் எதிர்ப்புப் பொருள்கள் உள்ளன' என்று தெரிவித்திருக்கிறார்.

COVID-19 / SARS/MERS
COVID-19 / SARS/MERS

இதற்கு முந்தைய ஆய்வுகளில் சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome) மெர்ஸ் (Middle East Respiratory syndrome) வைரஸ்களை, எத்தனால் கொண்டு அழிக்க முடியும் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. `எனவே கோவிட்-19 வைரஸின் லிப்பிட் படலத்தை மௌத்வாஷ் கொண்டு தகர்க்க முடியுமா என்பதை நாம் விரைவாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கண்டறிய வேண்டும்' என்று கூறியுள்ளார் ஓ'டோனெல்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு