Published:Updated:

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை அவசியமா? பெற்றோர்கள் கவனத்துக்கு! - கண்கள் பத்திரம் - 8

Baby (Representational Image) ( Photo by Omar Lopez on Unsplash )

``கண்ணில் பூ விழுந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு அழைத்துவரப்படும் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்தால் விழித்திரை விலகி இருப்பதை அதிகம் பார்க்கிறோம். அந்த நிலையை ரிவர்ஸ் செய்யவே முடியாது. அறுவைசிகிச்சை மேற்கொண்டாலும் முழுமையான பலன் இருக்குமென சொல்ல முடியாது."

பிறந்த குழந்தைக்கு கண் பரிசோதனை அவசியமா? பெற்றோர்கள் கவனத்துக்கு! - கண்கள் பத்திரம் - 8

``கண்ணில் பூ விழுந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு அழைத்துவரப்படும் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்தால் விழித்திரை விலகி இருப்பதை அதிகம் பார்க்கிறோம். அந்த நிலையை ரிவர்ஸ் செய்யவே முடியாது. அறுவைசிகிச்சை மேற்கொண்டாலும் முழுமையான பலன் இருக்குமென சொல்ல முடியாது."

Published:Updated:
Baby (Representational Image) ( Photo by Omar Lopez on Unsplash )

காலங்கடந்த பரிசோதனைகளும் சிகிச்சைகளும்தான் நம் மக்கள் பலரும் செய்கிற பரவலான தவறு. எந்த பிரச்னையாக இருந்தாலும் லேசான அறிகுறி தென்படும்போதே எச்சரிகையாகி மருத்துவ ஆலோசனையைப் பெற்றுவிட்டால் பெரிய இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கண் பாதிப்புகள் சில அந்த ரகம்தான். இந்த விஷயத்தில் பெற்றோர் எச்சரிகையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

``கண்களில் பூ விழுந்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு குழந்தைகளை அழைத்து வருவார்கள் பெற்றோர்கள். இதை `கேட்ஸ் ஐ ரெஃப்ளெக்ஸ்' (cat's eye reflex) என்போம். போட்டோ எடுக்கும்போது பொதுவாக இரண்டு கண்களிலிருந்தும் ஒளியானது விழித்திரையின் மேல் விழுந்து கண்ணின் பாப்பா பகுதியானது சிவப்பாகத் தெரியும். அதுதான் நார்மல். ஆனால், சில குழந்தைகளுக்கு ஒரு கண்ணில் மட்டும் வெள்ளையாகத் தெரியும். பேச்சுவழக்கில் `பூனைக்கண்' என்று சொல்வார்கள். அதைப் பார்த்து பயந்துபோய் குழந்தைகளைப் பெற்றோர் கண் மருத்துவரிடம் அழைத்து வருவார்கள். குழந்தையின் அந்தக் கண்ணில் கேட்டராக்ட் எனப்படும் கண்புரை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்புரை பாதிப்பை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பல நேரங்களில் கேட்டராக்ட் மாதிரியே வெள்ளையாகத் தெரிந்தாலும் அது கேட்டராக்ட்டாக இருக்காது. விழித்திரை சரியாக வளராமல் உருண்டையாக இருப்பதால் ஏற்படுவது இது. இந்தப் பிரச்னையை `நாரீ டிசீஸ்' (Norrie disease) என்று சொல்வோம். இந்த பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒரு கண் மட்டும் சிறியதாக இருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு `ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி' (Retinopathy of prematurity - ROP) என்ற பாதிப்பு வரலாம். அதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால், விழித்திரையானது விலசி பந்துபோல உருண்டையாகவும் வெள்ளையாகவும் தெரியும். கண்ணில் பூ விழுந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு அழைத்துவரப்படும் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்தால் விழித்திரை விலகி இருப்பதை அதிகம் பார்க்கிறோம். அந்த நிலையை ரிவர்ஸ் செய்யவே முடியாது. அறுவைசிகிச்சை மேற்கொண்டாலும் முழுமையான பலன் இருக்குமென சொல்ல முடியாது.

இது தவிர கருவிழியில் அல்சர், வைட்டமின் குறைபாடு, நாட்டு மருந்து உபயோகம், தாய்ப்பால் விடுவது போன்ற காரணங்களால் கருவிழி வெள்ளையானால்கூட அது `வொயிட் ரிஃப்ளெக்ஸ்' பாதிப்பாகவே காட்டும்.

Baby - Representative Image
Baby - Representative Image
Photo by Kristina Paukshtite from Pexels

குழந்தைகளுக்கு வரக்கூடிய மிகப் பரவலான புற்றுநோய்களில் ஒன்று `ரெட்டினோபிளாஸ்டோமா' (Retinoblastoma). இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் பார்வையைப் பாதுகாக்க முடியும். இதற்கு பிராகிதெரபி (Brachytherapy) தேவைப்படும். கண்ணுக்குள் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் மட்டும் கொடுக்கப்படும் ரேடியேஷன், அந்த இடத்தில் மட்டும் செலுத்தக்கூடிய கேன்சர் மருந்துகள் என நவீன சிகிச்சைகள் நிறைய உள்ளன. ஆனால், சீக்கிரம் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் மட்டுமே எப்பேர்ப்பட்ட நவீன சிகிச்சையும் பலன் தரும். எனவே, குழந்தை பிறந்த உடனேயே ஒரு முறை கண் பரிசோதனை, ஒரு வயதில் ஒரு முறை பரிசோதனை, பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்முன் ஒரு முறை பரிசோதனை - இந்த மூன்றும் மிக மிக முக்கியம்.''

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர் கேள்வி:

``என் பேத்திக்கு 6 வயதாகிறது. கண் பார்வை வலது புறம் -9 ஆகவும் இடது புறம் -1.5 ஆகவும் உள்ளது. அடிக்கடி செல்போன் பார்ப்பாள். கண் மருத்துவர் கண்ணாடி போடச் சொல்கிறார். இதை எப்படி சரி செய்வது?"

- ஆரோக்கிய செல்வராஜ் (விகடன் இணையத்திலிருந்து)

Child (representational image)
Child (representational image)
Photo by cottonbro

``ஒரு கண்ணில் பவர் அதிகமாக இருப்பதால் அந்தக் கண் சோம்பேறிக் கண்ணாக இருக்க வாய்ப்புண்டு. எனவே, மருத்துவர் சொல்வது போல கண்ணாடி போட வேண்டும். எனவே, இடது பக்க கண்ணை மூடி, வலது பக்க கண்ணால் பார்ப்பதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதே நேரம் -9 பவர் எனக் குறிப்பிட்டிருப்பதால் உங்கள் பேத்தியின் விழித்திரையின் மையப்பகுதி பலவீனமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி பலவீனமாக இருந்தால் இடது கண்ணை மூடி, வலது கண்ணுக்குப் பயிற்சி அளித்தாலும் பார்வையில் முன்னேற்றம் இருக்காது. எனவே, உங்கள் கண் மருத்துவர் சொல்வதைக் கேட்டுப் பின்பற்றவும்."

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism