Published:Updated:

Covid Questions: கல்லூரி செல்லும் பிள்ளைகளால் வீட்டிலுள்ள முதியவர்களுக்குத் தொற்று ஏற்படுமா?

Students (Representational Image)
News
Students (Representational Image) ( AP Photo/Altaf Qadri )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Published:Updated:

Covid Questions: கல்லூரி செல்லும் பிள்ளைகளால் வீட்டிலுள்ள முதியவர்களுக்குத் தொற்று ஏற்படுமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Students (Representational Image)
News
Students (Representational Image) ( AP Photo/Altaf Qadri )

எங்களுடையது கூட்டுக்குடும்பம். 80 வயது முதியவர்களும் இருக்கிறார்கள். பிறந்த குழந்தையும் இருக்கிறது. கல்லூரி செல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். முதியவர்களுக்கு மார்ச் மாதமே தடுப்பூசி போட்டுவிட்டோம். இந்நிலையில் அவர்களுக்கு இன்னும் தடுப்பூசியின் திறன் இருக்குமா? கல்லூரி செல்லும் பிள்ளைகளால் முதியவர்களுக்கும் சின்ன குழந்தைகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறதா?

- பைரவி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்
மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``உங்கள் வீட்டிலுள்ள முதியவர்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இரண்டாவது டோஸ் போட்டதிலிருந்து 4 முதல் 6 மாதங்கள் வரை அதன் நோய் எதிர்ப்பாற்றல் நீடிக்கும். அதன் பிறகு குறையத் தொடங்கும். கல்லூரி மாணவர்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களுக்கும் அனேகமாக தடுப்பூசி போட்டிருப்பீர்கள். கல்லூரிகளிலும் அதை வலியுறுத்துகிறார்கள். நிறைய கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்துகிறார்கள். கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.

மாணவர்களையும் சுழற்சி முறையில்தான் வகுப்புகளுக்கு வரச் சொல்கிறார்கள். எனவே கல்லூரி மாணவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத்தான் கொஞ்சம் ரிஸ்க். அவர்களுக்குத் தடுப்பூசி ஆரம்பிக்கப்படாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பள்ளிக்கூடங்களில் சிலர் தொற்றுக்குள்ளாவதைக் கேள்விப்படுகிறோம். அப்படி யாராவது பாதிக்கப்பட்டாலும் உடனே பள்ளியை மூடுவது, கிருமிநாசினியால் சுத்தம் செய்வது என நடிவடிக்கைகள் எடுக்கிறார்கள்.

A student uses hand sanitizer in a class in Gauhati, India
A student uses hand sanitizer in a class in Gauhati, India
AP Photo/Anupam Nath

மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ நோய் அறிகுறிகள் தெரிந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்களை நேரடி வகுப்புக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் இல்லை. பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களால் வீட்டிலுள்ள சிலருக்குத் தொற்று பாதிப்பு வரலாம். ஆனால் வீட்டிலுள்ளவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், அவர்களுக்குத் தொற்று வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனவே அதை நினைத்து நீங்கள் பயப்படத் தேவையில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!