Published:Updated:

Doctor Vikatan: பீரியட்ஸின்போது உறவு கொண்டால் கருத்தரிக்காதா?

Couple (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பீரியட்ஸின்போது உறவு கொண்டால் கருத்தரிக்காதா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by cottonbro from Pexels )

பீரியட்ஸ் நாள்களில் உறவு கொண்டால் கருத்தரிக்காது என்பது உண்மையா?

- ஜானகி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு கொள்வதால் கருத்தரிக்காது என்பது முட்டாள்தனமான நம்பிக்கை. அந்த நாள்களில் பாதுகாப்பான கருத்தடை முறை பின்பற்றப்படாதபோது கருத்தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக, 24 - 25 நாள்களுக்கொரு முறை பீரியட்ஸ் சுழற்சி வருபவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். உயிரணுவானது பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையில் 5 நாள்கள்வரைகூட உயிரோடு இருக்கும். எனவே, பீரியட்ஸ் முடிந்த 5 நாள்களுக்குப் பிறகுகூட அந்த உயிரணு, கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறுகிய மாதவிடாய் சுழற்சி உள்ளவர்களுக்கும் சீக்கிரமே கருத்தரித்தல் நிகழும் தன்மை கொண்டவர்களுக்கும் இப்படி நிகழலாம். எனவே, பீரியட்ஸ் நாள்களில் உறவு கொள்வதாக இருந்தால் கருத்தடை முறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தாண்டி, வெஜைனா பகுதியில் உள்ள பி.ஹெச் அளவானது பீரியட்ஸ் நாள்களில் வெளியேறும் ரத்தப்போக்கின் காரணமாக அதிகரிக்கும். அதன் காரணமாக வெஜைனா பகுதியில் ஈஸ்ட் இன்ஃபெக்ஷனும், சிறுநீர்ப்பாதைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by cottonbro from Pexels

இதில் இன்னோர் ஆபத்தும் உண்டு. பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு கொள்வதன் மூலம் பால்வினை நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் மிக அதிகம். அந்த நாள்களில் காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism