``கொரோனா வைரஸ் பெரும்பாலும் மூக்கின் வழியேதான் நம் உடலுக்குள்ளே நுழைகிறது. அதன்பிறகே சுவாசக்குழாய், நுரையீரல் எனப் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குகிறது. வைரஸ் மூக்கில் இருக்கும்போதே அதை அழிப்பதற்கு சுக்கைப் பயன்படுத்தலாம் என மும்பையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஜரிர் உத்வாடியா குறிப்பிட்டுள்ளார். இவர், காசநோய் தொடர்பான ஆராய்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நம்மை நாளுக்குநாள் அச்சுறுத்தி வருகிறது. தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் எளிதான ஒரு வழியை நான் கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகிறேன். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறேன். Dried Ginger என்றழைக்கப்படும் சுக்கைப் பொடித்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்தப் பொடியை சிறிதளவு கையில் எடுத்து இரண்டு மூக்கு துவாரங்கள் வழியாகவும் மோர வேண்டும். சுக்கு `ஆல்கலைன்' என்றழைக்கப்படும் காரத்தன்மை அதிகமுள்ள பொருள்.
பொதுவாக நம்முடைய மூக்கின் உட்பகுதியில் இருக்கும் சளி (Mucus) அமிலத்தன்மைமிக்கது. கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் நம்முடைய மூக்கின் அமிலத்தன்மையில் மட்டுமே உயிர்வாழத் தகுந்தவை.

சுக்கில் இருக்கும் காரத்தன்மை அந்தக் கிருமியை அழித்துவிடும். நம்முடைய மூக்கிலேயே கிருமி அழிக்கப்படுவதால் நோய்த்தொற்று, நுரையீரல் வரை செல்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த முறையை நாம் தினமும் கடைப்பிடித்தால் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மருத்துவர் ஜரித் உத்வாடியாவின் கருத்து பற்றி சென்னையைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் ஜாக்கின் மோசஸிடம் கேட்டபோது, ``டாக்டர் உத்வாடியா கூறியிருப்பது அவருடைய கருத்து. அவர் நுரையீரல் சம்பந்தப்பட்ட துறையில் மிகவும் அனுபவமிக்கவர்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், எந்த மருத்துவ ஆலோசனையையும் முறையான அறிவியல் ஆராய்ச்சிக்குப் பின்னரே நாம் முழுமையாகப் பின்பற்ற முடியும். ஒரு துறையின் வல்லுநர் ஏதாவதொரு விஷயத்தை அவரது அனுபவத்தில் சொன்னால் அதை 100 சதவிகிதம் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
உதாரணமாக, பாராசிட்டமால் மாத்திரையைக் காய்ச்சல் வந்தால் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பல வகையான ஆய்வுகளைப் பலரிடம் மேற்கொண்டு நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதுபோல கொரோனாவுக்கு சுக்குப்பொடியை உபயோகிக்கலாமா என்பதை ஆய்வு மேற்கொண்டு அந்தத் தரவுகளை வைத்துதான் அறிய முடியும். அதன்பிறகே இதை அனைவரும் பயன்படுத்த அறிவுறுத்த முடியும். ஒரு வல்லுநரின் கருத்தை அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும் வேண்டுமானால் அப்படியே ஏற்று நடக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் அதைப் பின்பற்ற வேண்டுமானால் முறையான ஆய்வு தேவை" என்கிறார்.
சுக்கைப் பயன்படுத்துவது குறித்து சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்டோம்.
``சித்த மருத்துவத்தில் ஒரு முறையை நாம் கடைப்பிடிக்கும்போது, அது மரபு வழி சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அது சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

மூலிகைப் பொடிகளை மூக்கில் மோர்வது சித்த மருத்துவப்படி `ஆக்கிரணம்' என்னும் முறை ஆகும். சுக்குப்பொடியை மூக்கில் மோரும்போது நமது சுவாசப் பாதையிலிருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு நம்முடைய எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
கொரோனாவுக்கு மட்டுமல்ல மூக்கின் வழி ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இது பொருந்தும். ஆனால், ஒரு மூலிகைப் பொடியை சுயமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
சித்த மருத்துவரின் உரிய ஆலோசனை தேவை. ஆக்கிரணம் செய்வதற்கே சில வழிமுறைகள் உள்ளன. முதலில் சுக்கு மிகவும் நன்றாக நுணுக்கப்பட்டு பொடியாக்கப்பட வேண்டும். சுக்கைப் பொடியாக மோர்வதைவிட சுக்குத் தைலத்தைப் பயன்படுத்தலாம். சுக்குத் தைலம் பயன்படுத்த மிக எளிது என்பதோடு எளிதாகவும் கிடைக்கும்.
சுக்குத் தைலத்தை உச்சந்தலையில் தேய்க்கலாம், மூக்கிலும் காதுகளிலும்கூட பயன்படுத்தலாம். காலையில் குளிப்பதற்கு முன்பும் இரவிலும் உபயோகிக்கலாம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள சித்த மருத்துவப் பிரிவிலும், சித்த மருந்துக் கடைகளிலும் இந்தத் தைலம் கிடைக்கும். அதை வாங்கும்போது அரசின் அனுமதிபெற்ற தரமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா என்பதை சரிபார்ப்பது மிக அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி எந்த வைத்தியத்தையும் யாரும் சுயமாகப் பின்பற்ற வேண்டாம்" என்கிறார்.