Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு உடல் பருமன் அதிகரித்தது போல் உணர்கிறேன்; ஏன்?

COVID-19 vaccine
News
COVID-19 vaccine ( AP Photo / Bikas Das )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: தடுப்பூசிக்குப் பிறகு உடல் பருமன் அதிகரித்தது போல் உணர்கிறேன்; ஏன்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

COVID-19 vaccine
News
COVID-19 vaccine ( AP Photo / Bikas Das )

என் வயது 38. இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் 54 கிலோ எடை இருந்த நான், இரண்டு மாதங்களில் 60 கிலோ ஆகிவிட்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் எடை கூடுமா? என் தோழிகள் சிலரும் இப்படிச் சொல்கிறார்கள். என்ன காரணம்?

- பூஜா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி
மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கொரோனாவை தொடர்ந்த ஊரடங்கு காலத்தில் பலரும் உடல் பருமன் பிரச்னையை எதிர்கொண்டார்கள். குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை ஆய்வறிக்கையாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எடை அதிகரிப்பது தொடர்பான அறிவியல்பூர்வமான, நிரூபிக்கப்பட்ட காரணங்கள் நம்மிடம் இதுவரை இல்லை.

COVID-19 vaccine (Representational Image)
COVID-19 vaccine (Representational Image)
AP Photo/Anupam Nath

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உடல்பருமன் பாதிப்பு வருவதாகக் கேள்விப்படுகிறோம். அவர்களுக்கு ஹார்மோன்களில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படுவதையும், அதன் விளைவாக பீரியட்ஸ் சுழற்சி மாறுவதையும், எடை அதிகரிப்பதையும் பார்க்கிறோம். உங்கள் விஷயத்திலும் இப்படி ஏதேனும் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?