Published:Updated:

`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா?' #DoubtOfCommonMan

கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, 80% பேர் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். 20% பேருக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. 5% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நோயிலிருந்து மீண்டு குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

Corona safety measures
Corona safety measures

Doubt of Common man பக்கத்தில் நம்முடைய வாசகர் கனி சலீம், "கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா? குணமடைந்தவர்களுக்கான உணவுமுறை என்ன ? அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று கேள்விகள் எழுப்பியிருந்தார். இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தியிடம் பேசினோம்.

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

"இது புதுவகையான வைரஸ். உலகிற்கு அறிமுகமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில் இந்த வைரஸ் பற்றிய முழு விவரங்களைப் புதிதுபுதிதாகத் தெரிந்து கொண்டுதான் வருகிறோம். வைரஸின் துல்லியமான நோய் அரும்புக் காலம், அது எவ்வளவு காலம் மனித உடலுக்கு உள்ளும் வெளியிலும் வாழும் என்பதையெல்லாம் சரியாகக் கூற முடியாத நிலையில் உள்ளோம். ஒரு நோயாளி தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமாகிவிட்டார் என்று அறிவிப்பதற்கான வரையறைகளாக உலக சுகாதார நிறுவனம் கூறுவதை நாங்கள் பின்பற்றுகிறோம். 24 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட இரண்டு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என்று வரவேண்டும். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளில் 50% முன்னேற்றம் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி
அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி

காய்ச்சல், இருமல் இருக்கக்கூடாது. நன்கு உண்டு, உறங்கும் தன்மை, ஆக்சிஜன் செறிவடைதல் (oxygen saturation) சீரான நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து மீண்டவராக நாங்கள் கருதுகிறோம். சிலருக்கு 24 மணிநேர இடைவெளியில் இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது ஒரு பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாகவும் மற்றொன்று பாசிட்டிவ்வாகவும் வரும் நிலையும் உள்ளது. ஒருவர் நோயிலிருந்து குணமாகிவிட்டார் என்றால் முழுவதுமாக வைரஸ் தொற்று நீங்கிவிட்டது என்று சொல்ல முடியாது.

`உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்... அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா?!’ -அதிர்ச்சி தரும் ICMR

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அது அவர்களின் உடலில் தங்கி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் நோயிலிருந்து மீண்டவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம். தென்கொரியாவில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான காரணம், அவர்கள் அறிகுறிகள் அற்று தொற்று இருக்கும் நபருடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

corona transmission
corona transmission

பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கென பிரத்யேக உணவுமுறை இல்லை, எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய சரிவிகித, சத்தான உணவை உண்ணலாம். அதிகம் புரதம் சேர்ப்பது நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளான வைட்டமின்-சி, பயறு வகைகள் ஆகியவற்றை உண்ணலாம்.

இரண்டு வகையான வௌவால்களுக்கு கொரோனா.. தமிழகம், கேரளாவுக்கு அதிர்ச்சிகொடுத்த ICMR ஆராய்ச்சி!

கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, 80% பேர் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமல் உள்ளனர். 20% பேருக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. 5% பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளனர்" என்கிறார் மருத்துவர் ஜெயந்தி.

மருத்துவர் சுரேஷ்குமார்
மருத்துவர் சுரேஷ்குமார்

இதுகுறித்து கருத்து தெரிவித்த தொற்று நோயியல் மருத்துவர் சுரேஷ்குமார் ,

" தென் கொரியாவில் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு, மீண்டும் தாக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லை. 3 மாதங்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். குறைந்தது மூன்று முதல் ஆறு மாதம்வரை வைரஸுக்கான எதிர்ப்புத்தன்மை நம் உடலில் இருக்கும். பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்த பின்பே வீட்டிற்கு அனுப்பப்படுவர்.

அவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகும் இரண்டு வாரங்களுக்குத் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் பற்றி முழுமையாகத் தெரியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பாதுகாப்பானவை'' என்கிறார் மருத்துவர். சுரேஷ்குமார்.

Doubt of common man
Doubt of common man
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு