Published:Updated:

Doctor Vikatan: கொரோனா வராமல் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: கொரோனா வராமல் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:
Tablets (Representational Image) ( Image by Michal Jarmoluk from Pixabay )

என் நண்பன் இதுவரை ஒருமுறைகூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை. அதற்கான காரணமாக அவன் சொல்வது இரண்டு வருடங்களாக அவன் எடுத்துவரும் வைட்டமின் சி மாத்திரைகளை. வைட்டமின் சி மாத்திரைகள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும், அதனால் தொற்று வராது என்று என்னையும் அதைப் பின்பற்றச் சொல்கிறான். வைட்டமின் சி எடுத்துக்கொள்ளலாமா?

- ஷெரிஃப் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்
மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்.

``உங்கள் நண்பரைப்போல மாதக் கணக்கில் வைட்டமின் சி மற்றும் மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சம்பந்தப்பட்ட நபருக்குப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த மாத்திரைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் மருந்து கம்பெனிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். பெரிய லாபம் சம்பாதிப்பார்கள்.

மக்கள் மத்தியில் இதுபோன்ற தவறான நம்பிக்கைகள் பல இருப்பதைப் பார்க்க முடிகிறது. மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, தேவையின் அடிப்படையில் பரிந்துரைத்தால் மட்டுமே எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சியும் மல்ட்டி வைட்டமினும் கொரோனாவிலிருந்து காக்கும் என நீங்கள் ஃபார்வேர்டில் படித்த வாட்ஸ்அப் மெசேஜ்களை நம்பி அவற்றை எடுத்துக்கொள்வதில் எந்தப் பலனும் இல்லை.

நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்த சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம் என அடிப்படை விஷயங்கள் அவசியம். கொரோனாவிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது மிகமிக முக்கியம்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Pixabay

கூடவே சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும், தடுப்பூசி போட்டுக்கொள்வதும் மட்டும்தான் உங்களைத் தொற்றிலிருந்து பாதுகாக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?