Published:Updated:

'கணவரோடு நான் வாழ்ந்தால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டினார்கள்'.... - எழுத்தாளர் பிரியா பாபு

இந்த வேலை மட்டுமே என் வாழ்க்கையல்ல. அதைத்தாண்டி பெரிய உலகம் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்தேன். வேலையை விட்டுவிடுவதென முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அதிகாரியிடம் கொடுத்ததும் அவர் அதிர்ச்சியாகிவிட்டார்.

பிரியா பாபு
பிரியா பாபு

எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் திருநங்கை பிரியா பாபு. `அரவாணிகள் சமூக வரைவியல்’, கோவை நிர்மலா கலைக் கல்லூரி, மதுரை மீனாட்சி கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ள `மூன்றாம் பாலின் முகம்’, `வெற்றிப்படிக்கட்டுகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். `தமிழகத்தில் திருநங்கையர் வழக்காறுகள்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரியா பாபு
பிரியா பாபு

`வானம் தாண்டி’ என்ற பெயரில் இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். `டிரான்ஸ் மீடியா’ (Tranz Media) என்ற யுடியூப் சேனலைத் தொடங்கி நடத்திவருகிறார். இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையருக்கான ஆவண மையத்தை (Transgender Resource Center) மதுரையில் நடத்திவருகிறார். அவர் தன் வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அதை எதிர்கொண்ட விதத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``நம் சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பரிகசிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளானவர்கள்தான். அதை நானும் எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறேன். சமூகத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்க நினைத்தபோது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, வேலை தேடும் படலத்தைச் சொல்லலாம். 1999-ம் ஆண்டுவாக்கில் நிறைய நிறுவனங்களில் வேலை கேட்டுச் சென்றிருக்கிறேன். இன்று இருப்பதுபோல அப்போது திருநங்கைகளுக்கான ஆதரவோ, அரசு உதவிகள், சட்ட திட்டங்கள் எதுவும் சாதகமாக இல்லை. அதனால் நிறைய இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியதாக இருந்தது.

`திருநங்கைக்கு யார் வேலை கொடுப்பார்?’ என்கிற கேள்வியை நிறைய இடங்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பத்தி எழுத்தாளராக (Column Writer) வேலைக்குச் சேர்ந்தேன். `அர்த்தநாரீஸ்வரம்’ என்கிற தலைப்பில் கட்டுரைகள் எழுதினேன். அந்தப் பத்திரிகையில் பிறரைக் காட்டிலும் குறைவான ஊதியத்தையே பெற்றேன். ஆனால், வேலை நேரம் அதிகமாக இருந்தது. எல்லோரையும்போல கடுமையாக உழைக்கிறோம். ஆனால் நமக்கு மட்டும் ஊதியம் குறைவாக இருக்கிறதே என்று நினைத்து வருத்தப்பட்டேன்; மன உளைச்சலுக்கும் ஆட்பட்டேன்.

அந்த நேரத்தில் என் மேலதிகாரியிடம் சென்று, என்னுடைய பிரச்னைகளைச் சொன்னேன். `உனக்கு யார் வேலை கொடுப்பா... நான் கொடுத்திருக்கேன்..’ என்று பதிலளித்தார். அவர் எனக்கு யாசகம் செய்வதுபோல பேசியது என் மனதைக் காயப்படுத்தியது. அவரின் அறையைவிட்டு வெளியே வந்த இரண்டு மணி நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பெரும் மனப்போராட்டமாக இருந்தது. `வேலையை விட்டுவிடலாமா?' என்று யோசித்தேன். அந்த நேரத்தில் ஒரு முடிவை எடுத்தேன்.

பிரியா பாபு
பிரியா பாபு

இந்த வேலை மட்டுமே என் வாழ்க்கையல்ல. அதைத்தாண்டி பெரிய உலகம் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்தேன். வேலையை விட்டுவிடுவதென முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அதிகாரியிடம் கொடுத்ததும் அவர் அதிர்ச்சியாகிவிட்டார். `என்ன... பழைய தொழிலுக்கே போகப்போறியா?’ என்றார். `இல்லை. நான் பெரிய ஆளாகப்போகிறேன்.. அந்த வெறியோடு இந்த அலுவலகத்தை விட்டுச்செல்கிறேன்’ என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தைக் கடக்க உதவியாக இருந்தது என் வாசிப்பு அனுபவம்தான்.

அது அழகான, நிம்மதியான வாழ்க்கையாக இருந்தது. இனிமையாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு பிரச்னை வந்தது. பாபு வீட்டில் அவருக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்காக அவரிடம் வேறொரு காரணம் சொல்லி, அவரை ஊருக்கு வரவழைத்தார்கள். அங்கே போனதும் அவர் என்னிடம் திரும்பி வராமலிருக்க நெருக்கடி கொடுத்தார்கள். மூன்று மாதங்களாகியும் அவர் என்னைப் பார்க்க வரவில்லை.
எழுத்தாளர் பிரியா பாபு

`நமக்கு இன்னொரு உலகம் இருக்கு, வாழ்க்கையிருக்கு' என்பதைத் தொடர் வாசிப்பின் வழியாகக் கண்டடைந்தேன். எந்த எழுத்தால் (பத்திரிகைப் பணி) தோற்றோமோ அதே எழுத்தால் வெற்றியடைய வேண்டும் என நினைத்தேன். பிறகு ஹெச்.ஐ.வி விழிப்புணர்வு சேவை நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அப்போதுதான் என்னுடைய நூல்கள் தொடர்ச்சியாக வெளியாக ஆரம்பித்தன. அதேபோல, என் திருமண வாழ்க்கையிலும் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. பாபு என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன்.

பிரியா பாபு
பிரியா பாபு

ஆறு வருடங்கள் அவரோடு வாழ்ந்தேன். இருவரும் வேலைக்குச் சென்று வந்தோம். சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் எங்களுக்காக வீடு கட்டினோம். அது அழகான, நிம்மதியான வாழ்க்கையாக இருந்தது. இனிமையாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு பிரச்னை வந்தது. பாபு வீட்டில் அவருக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்காக அவரிடம் வேறொரு காரணம் சொல்லி, அவரை ஊருக்கு வரவழைத்தார்கள். அங்கே போனதும் அவர் என்னிடம் திரும்பி வராமலிருக்க நெருக்கடி கொடுத்தார்கள். மூன்று மாதங்களாகியும் அவர் என்னைப் பார்க்க வரவில்லை. இறுதியாக, அவர் குடும்பத்தாரிடம் பேசியபோது, அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

பாபுவிடம் பேசியபோது, `உன்னோடு இருந்தால் என் வீட்டில் உள்ள எல்லோரும் தற்கொலை செய்துகொள்வோம்' என்று கூறி மிரட்டி என்னை இங்கே (வெளிநாடு) அனுப்பிவைத்தார்கள். ஊருக்குத் திரும்பினால் உன்னை வந்து பார்ப்பேன். உன்னோடுதான் வாழ்வேன்' என்று சொன்னார். பிறகு ஒரு வருடம் கழித்து அவர் ஊருக்கு வருவதாக இருந்தது.

பிரியா பாபு
பிரியா பாபு

அப்போது அவரது குடும்பத்தினர் எனக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். `பாபு உன்னைப் பார்க்க வந்தா, நாங்க எல்லோரும் செத்துப் போய்டுவோம்’ என்று சொல்லி, மிரட்டினார்கள். ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் எல்லோரையும் இழந்துவிட்டு நாங்கள் இருவரும் வாழ்வதா அல்லது என்னுடைய சந்தோஷத்தை தியாகம் செய்துவிட்டு அவரை விட்டுக்கொடுத்துவிடுவதா என்கிற பெரிய மனப்போராட்டம் எனக்குள் நிகழ்ந்தது.

என் சக நண்பர்கள், `நம்மைப் போன்றவர்களுக்கு கணவர் என்ற உறவு நிரந்தரமில்லை’ என்பதைப் புரியவைத்தார்கள். அப்போது நிறைய பெண் ஆளுமைகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் எதிர்கொண்ட சவால்களை அறிந்துகொண்டேன். அதன்பிறகு திருமணத்தைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். 
எழுத்தாளர் பிரியா பாபு

எங்கள் இருவரது வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பல மீடியாக்கள் எங்களைப் பதிவு செய்திருந்தன. கணவன் - மனைவியாக பல இடங்களுக்குப் போய் வந்திருக்கிறோம். இப்போது அவர் இல்லையென்றால் என்னை இந்தச் சமூகம் எப்படி மதிக்கும் என்று யோசித்தேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது நான் நானாகவே இல்லை. கிட்டத்தட்ட மனநோயாளியைப் போல ஆகிவிட்டேன்.

'கணவரோடு நான் வாழ்ந்தால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டினார்கள்'.... - எழுத்தாளர் பிரியா பாபு

நான் இயல்புக்குத் திரும்ப மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என் சக நண்பர்கள், `நம்மைப் போன்றவர்களுக்கு கணவர் என்ற உறவு நிரந்தரமில்லை’ என்பதைப் புரியவைத்தார்கள். அப்போது நிறைய பெண் ஆளுமைகளைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் எதிர்கொண்ட சவால்களை அறிந்துகொண்டேன்.

அதன்பிறகு திருமணத்தைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அப்போது நான் எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன்.

பிரியா பாபு
பிரியா பாபு

கம்ப்யூட்டரைக் கையாளக் கற்றுக்கொண்டேன். `ஆண் என்கிற உறவு மட்டுமல்ல, எந்த உறவுமே நிரந்தரமில்லை' என்பதை உணர்ந்தேன். என்னுடைய வாழ்க்கையை நான் மட்டுமே தீர்மானித்துக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து திருநங்கையரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்துவருகிறேன்'' என்கிறார் பிரியா பாபு.