Published:Updated:

சலூன், பார்லர் செல்லும்போது எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்? #LiveWithCoronaGuide

''சலூன் மற்றும் பார்லர்களை தினமும் கிருமி நீக்கம் செய்து, கஸ்டமர்கள் உள்ளே நுழையும்போதே கிளவுஸ், மாஸ்க் கொடுக்கப்பட வேண்டும்.''

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்கள் தங்கள் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்ய ஆரம்பித்துவிட்டன. நாமும் ஃபிரெஷ்ஷாக அலுவலகம் கிளம்ப வேண்டும். அதனால் இளநரை பிரச்னை இருப்பவர்களும் நாற்பதுகளில் இருப்பவர்களும் தற்போது தேடுவது பார்லர் மற்றும் சலூன்களைத்தான். இதற்கேற்றாற்போல, நேற்றைய தினம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தடைசெய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து, மற்ற இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் தங்களை அழகுப்படுத்திக்கொள்ளத் தயாராக, முகத்துக்கு மாஸ்க், கைகளுக்கு க்ளவுஸ், ஏப்ரன் என்று அழகுக்கலை நிபுணர்களும் இரண்டரை மாதங்கள் கழித்து தங்கள் வாழ்வாதாரத்துக்குத் திரும்பிவிட்டார்கள்.

அழகுக்கலை நிபுணர் வீணா
அழகுக்கலை நிபுணர் வீணா

சரி, கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு ஏற்றபடி, இனிமேல் பார்லர்கள் மற்றும் சலூன்கள் எப்படி இயங்கப்போகின்றன..? கஸ்டமர்களின் பாதுகாப்புக்கு இவை என்னென்ன செய்ய ஆரம்பித்திருக்கின்றன என்று அழகுக்கலை நிபுணர் வீணாவிடமும், பார்லருக்குச் செல்லும்போது கஸ்டமர்கள் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அழகுக்கலை நிபுணர் வசுந்தராவிடமும் கேட்டோம்.

கஸ்டமர்களின் பாதுகாப்புக்கு பியூட்டி சலூன்கள் என்னென்ன செய்ய ஆரம்பித்திருக்கின்றன என்பது பற்றிப் பகிர்ந்தார், அழகுக்கலை நிபுணர் வீணா.

''பியூட்டி கவுன்சலின் அறிவுறுத்தலின்படி, பலரும் பார்லர்களில் கொரோனா தற்காப்புப் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். இவையெல்லாம் நீங்கள் செல்கிற பார்லர்களிலும் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

* சலூன் மற்றும் பார்லர்களை தினமும் கிருமி நீக்கம் செய்து, கஸ்டமர்கள் உள்ளே நுழையும்போதே கிளவுஸ், மாஸ்க் கொடுக்கப்பட வேண்டும்.

* துவைத்துப் பயன்படுத்துகிற ஏப்ரன்களுக்குப் பதில் டிஸ்போசபிள் கவுன் கொடுப்பதே பாதுகாப்பு.

Parlour #LiveWithCoronaGuide
Parlour #LiveWithCoronaGuide

* பணியாளர்களை இரண்டு ஷிஃப்ட் முறையில் பணியமர்த்துவது, கஸ்டமர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து ஒருவர் பின் ஒருவராக அனுமதிப்பது எனப் பின்பற்றலாம்.

* புருவத்தைத் திருத்தும்போது, நூலை வாயில் வைக்காதபடி கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் புதிய முறை குறித்து ஆன்லைன் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. நூலைக் கழுத்தைச் சுற்றிப்போடும்போது, அழகுக்கலை நிபுணர்கள் தங்கள் கோட் மேல் சுற்றிப்போடுவார்கள். கைகளில் இருக்கிற நூல்தான் நகர்ந்துகொண்டிருக்கும் என்பதால், அழகுக்கலை நிபுணருக்கு இதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. கழுத்தைச் சுற்றுகிற நீளத்தில் வெல்வெட் துணியில் இரண்டு நுனியிலும் கிளிப்ஸ் இருக்கும்படியான பிரத்யேக புராடக்ட் விரைவில் புழக்கத்துக்கு வரவிருக்கிறது. புருவம் திருத்துவதற்கான நூலை இந்தத் துணியின் மீது வைத்து, இரண்டு பக்கமும் கிளிப்ஸ் போட்டுவிட்டு புருவம் திருத்தலாம்.

ஆண்களுக்கு மீசை, தாடியை ட்ரிம் செய்யும்போது அழகுக்கலை நிபுணர் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கஸ்டமரின் முகத்துக்கு வெகு அருகில் செல்லாதிருப்பது இருவருக்குமே நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ஹேர் கலரிங்குக்கு ஒரு நாள், ஃபேஷியலுக்கு ஒரு நாள் என்று அடிக்கடி செல்வதைத் தவிர்த்து, ஒருமுறை செல்லும்போதே அனைத்து சர்வீஸ்களையும் முடித்துக்கொண்டு திரும்புவது உங்களுக்கும் நல்லது, பார்லரில் வேலைபார்ப்பவர்களுக்கும் நல்லது.''

பார்லருக்குச் செல்லும்போது கஸ்டமர்கள் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பகிர்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.
அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

* பார்லரில்/பார்லர் அறையில் ஏற்கெனவே ஒருவர் உள்ளே இருந்தால், நீங்கள் வெளியே காத்திருங்கள்.

* டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள், சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சலூனுக்குள் உடனே நுழையாதீர்கள்.

* புருவம் திருத்தும்போது, பியூட்டிஷியன்கள் ஹெல்மெட்டின் முன்புறம் இருப்பதுபோன்ற வைஸரும், நீங்கள் மாஸ்க்கும் அணிந்துகொள்ள வேண்டும்.

* காலணியை பார்லருக்கு வெளியே விட்டுச் செல்வது, அங்கே உங்களால் தொற்று பரவுவதைத் தவிர்க்க உதவும். அல்லது டிஸ்போஸபிள் ஸ்லிப்பர் பயன்படுத்தலாம்.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

* பியூட்டிஷியன், கஸ்டமர் இருவரும் ஒருவரையொருவர் தொடக் கூடாது.

* கத்தி, கத்தரிக்கோல், பெடிக்யூர் செய்கிற உபகரணங்கள் ஸ்டெர்லைஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* கொரோனா காரணமாக, தற்போது சில காஸ்மெட்டிக் நிறுவனங்கள் ஒன் டைம் யூஸ் பியூட்டி சர்வீஸ் கிட்டை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அதை நீங்கள் வாங்கி உங்களுக்குப் பயன்படுத்தச் சொல்லலாம். மீதமிருந்தால் நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாம்.

* குழந்தைக்கு ஹேர்கட் செய்ய சலூனுக்கு அழைத்துச் செல்லும்போது வீட்டிலிருந்தே டவல், சீப்பு, கத்தரிக்கோல் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கும்கூட இதைப் பின்பற்றலாம்.

* பார்லர்களில் பியூட்டி சர்வீஸ் செய்பவர்களின் யூனிஃபார்ம்களின் சுகாதாரத்தை வலியுறுத்துங்கள். நகங்களையும் அவர்கள் வெட்டியிருக்க வேண்டும்.

Saloon #LiveWithCoronaGuide
Saloon #LiveWithCoronaGuide
பேருந்துப் பயணங்கள், உணவக மேசைகள்... கொரோனாவோடு வாழ மருத்துவர் அறிவுரைகள்! #LiveWithCoronaGuide

* கைகால்களுக்கு வேக்ஸிங் செய்யும்போது, ஒரு தடவை பயன்படுத்துகிற மரத்தாலான ஸ்பாட்டுலாவினால் வேக்ஸைத் தடவி, டிஸ்போசபிள் ஸ்டிரிப்பால் முடியை நீக்கி விடுவோம். மெட்டல்களில் கொரோனா சில நாள்கள் வாழும் என்பதால், அதை நாங்கள் பயன்படுத்துவது இல்லை.

* குளிர்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டு, கோல்டு ஸ்டீம் எடுக்க வேண்டாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு