Published:Updated:

மருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது? தடுக்க முடியாதா? #DoubtOfCommonMan

கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்

மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று எப்படிப் பரவுகிறது?

Published:Updated:

மருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது? தடுக்க முடியாதா? #DoubtOfCommonMan

மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று எப்படிப் பரவுகிறது?

கொரோனா வைரஸ்
News
கொரோனா வைரஸ்
விகடன் #DoubtOfCommonMan பக்கத்தில், "பாதுகாப்பு கவசங்களை மீறி மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?" என்ற கேள்வியைக் கலைச்செல்வி கோபாலன் என்ற வாசகி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.
Doubt of a common man
Doubt of a common man

கொரோனா பற்றி அனுதினமும் பல செய்திகள் நம்வசம் வந்து குவிகின்றன. Covid 19 பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை, நோயிலிருந்து குணமடைந்தவர்களைப் பற்றிய தகவல்கள், தத்தம் மாவட்டங்களில் எத்தனை பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது... இப்படி கொரோனா சார்ந்த பல செய்திகள் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கடந்த வாரம் வெளியான செய்தி ஒன்று மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அம்பத்தூரில் மருத்துவர் ஒருவர் கொரோனா காரணமாக இறந்த செய்தி. கொரோனா தொற்றலிருந்து மக்களைக் காக்க ஓய்வறியாமல் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவரின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மற்றொருபுறம், போதிய பாதுகாப்பு இருந்தும் மருத்துவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்பதும் மக்கள் மத்தியில் சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று எப்படி பரவுகிறது? அவர்கள் என்ன மாதிரியான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துகிறார்கள்?

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ராவிடம் கேட்டோம்.

"மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட இரண்டு விதமான காரணங்கள் உண்டு. ஒன்று பாசிட்டிவ் என உறுதிபடுத்தப்பட்டவர்களின் வார்டில் பணிபுரியும்போது ஏற்படும் தொற்று. மற்றொன்று ஓ.பி என்பபடும் அவுட் பேஷன்ட் வார்டில் பணிபுரியும்போது ஏற்படும் தொற்று. சில சமயங்களில் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும் முன்பே வைரஸ் பரவும் அபாயம் உண்டு. அதுமாதிரியான நேரங்களில் நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் சற்று இயல்பாக இருப்பார். அப்போது தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

மருத்துவர். சித்ரா
மருத்துவர். சித்ரா

ஓ.பி வார்டில் பெரும்பாலும் மருத்துவர்கள் 'மாஸ்க்' மற்றும் ’கிளவுஸ்’ மட்டுமே அணிந்திருப்பார்கள். அந்த சமயத்தில் கொரோனா தொற்று மருத்துவருக்கும் பரவலாம். சில சமயங்களில் மருத்துவர்கள் பரிசோதனை செய்த அறையில் யாருக்கேணும் கொரோனா தொற்று இருந்து அதன் மூலம் மருத்துவருக்குப் பரவியிருக்கலாம்.

முழு உடல் கவசம் (PPE - Personal Protective Equipment) அணிந்துகொண்டு பணிபுரியும் சூழலில் மருத்துவருக்குக் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு மிகமிகக் குறைவு.
மருத்துவர் சித்ரா

PPE- தற்காப்பு இருக்கிறபோதும் கை கழுவுதல் உள்ளிட்டவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. கொரோனா அறிகுறி தெரியும் முன்பே முழுப் பாதுகாப்பு கவசம் அணியாமல் நோயாளிகளைப் பரிசோதனை செய்த காரணத்தால்தான் பல மருத்துவர்களுக்குப் பரவியிருக்கிறது. ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்ற மருத்துவருக்கு இப்படித்தான் பரவியிருக்கிறது.

பாதுகாப்பு உபகரணங்கள்:

பொதுவாக ஓ.பி வார்டில் இருக்கும்போது முழுப் பாதுகாப்பு கவசத்தை மருத்துவர்கள் அணிந்திருக்க மாட்டார்கள். N95 மாஸ்க் மற்றும் கையுறை மட்டுமே அணிந்திருப்பர். கொரோனா வார்டில் நுழைகையில் மட்டுமே முழுப் பாதுகாப்பு கவசம் அணிவர். இப்போது, சாதாரண சளி, காய்ச்சல் எனப் பரிசோதனைக்குவரும் நோயாளிகளுக்குக்கூட முதலில் மாஸ்க் அணியச் சொல்லி, 2 மீட்டர் இடைவெளியில் அமரவைத்தே பரிசோதனையைத் தொடங்குகிறோம்.

கொரோனா தடுப்பு உபகரணம்
கொரோனா தடுப்பு உபகரணம்
மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வீட்டில் இருப்பர். இரண்டு பங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பர்.

மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும் வேலையில் அவருக்கு பதில் வேறொரு மருத்துவரை அந்த வார்டில் பணியமர்த்த வேண்டும். இதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வீட்டில் இருப்பர். இரண்டு பங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பர். அனைத்து மருத்துவர்களும் எல்லா நேரமும் மருத்துவமனையில் இல்லாமல், சுழற்சி முறையில்தான் பணிகளைப் பிரித்துச்செய்கிறோம். எனவே, இந்தச் சூழலைச் சமாளிக்க இயலும். இதை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம். மருத்துவர்களுக்குக் கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தல் உள்ளிட்டவற்றை முறையாகச் செய்கிறோம்." என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man