Published:Updated:

How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?

நெஞ்செரிச்சல்
News
நெஞ்செரிச்சல்

நேரத்துக்குச் சாப்பிடாததால் நம் இரைப்பையில் செரிமானத்துக்காக சுரக்கும் அமிலம், இரைப்பையில் தேங்கி இரைப்பையை அரிக்க ஆரம்பித்து விடும். ஒரு கட்டம் வரை இரைப்பையால் இதனைத் தாங்கிக் கொள்ளும். அந்த எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்னையே உண்டாகிறது.

Published:Updated:

How to: நெஞ்சு எரிச்சலைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Heartburn?

நேரத்துக்குச் சாப்பிடாததால் நம் இரைப்பையில் செரிமானத்துக்காக சுரக்கும் அமிலம், இரைப்பையில் தேங்கி இரைப்பையை அரிக்க ஆரம்பித்து விடும். ஒரு கட்டம் வரை இரைப்பையால் இதனைத் தாங்கிக் கொள்ளும். அந்த எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்னையே உண்டாகிறது.

நெஞ்செரிச்சல்
News
நெஞ்செரிச்சல்

பொதுவாகவே நெஞ்செரிச்சல் இருப்பதாக பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னமும் கிராமப்புறங்களில் நெஞ்செரிச்சலுக்கு சோடா குடிக்கும் பழக்கம் இருக்கிறது. நெஞ்செரிச்சல் என்பது, மோசமான விளைவொன்றின் அறிகுறி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நெஞ்செரிச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதாவிடம் கேட்டோம்…

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா | சென்னை
இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா | சென்னை

நெஞ்செரிச்சலும் காரணமும்!

“நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றங்களின் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் பிரச்னைக்கு ஆட்பட நேர்கிறது. இரவு தாமதமாகத் தூங்கி, காலையில் தாமதமாக எழுவதால் பலர் காலை உணவே சாப்பிடுவதில்லை. சிலருக்கு காலை உணவு சாப்பிடுவதென்பது, அவர்களது பழக்கத்திலேயே இல்லை. காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து ஒன்றாகச் சாப்பிட்டு விடுகிறார்கள்.

நேரத்துக்குச் சாப்பிடாததால் நம் இரைப்பையில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலம், இரைப்பையில் தேங்கி இரைப்பையை அரிக்க ஆரம்பித்து விடும். ஒரு கட்டம் வரை இரைப்பை இதனைத் தாங்கிக் கொள்ளும். அந்த எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்னையே உண்டாகிறது.

ஆஸ்துமா அபாயம்!

உட்கார்ந்தபடி வேலை பார்ப்பதால் இன்றைக்கு பரவலாக உடல் உழைப்பு முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் கொழுப்பு தேங்கி வயிற்றுப்பகுதி பருமனாகிவிடும். இதன் காரணமாக உணவுக்குழாய் இரைப்பையோடு இணைகிற வால்வு வலுவிழந்து போய் விடுவதால் இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்கு எதுக்களிக்கிறது.

ஆஸ்துமா
ஆஸ்துமா

நேரத்துக்கு தூங்காததாலும் நேரத்துக்கு சாப்பிடாததாலும் வயிற்றில் அதிகளவில் அமிலம் சுரக்கும். அவை எதுக்களித்து நெஞ்சுப்பகுதியில் படும்போதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுகையில் ஆஸ்துமாவுக்கு ஆளாகும் அபாயம் கூட இருக்கிறது.

தற்காத்துக் கொள்வது எப்படி?

Gastroesophageal reflux disease-ஐ இன்று அதிகம் பார்க்கிறோம். அதிக அமிலச்சுரப்பின் காரணமாக அமிலம் எதுக்களிக்கும் பிரச்னைதான் இது. உணவுக்குழாயைப் புண்ணாக்கி அதன் மூலம் ஒரு பிரச்னை ஏற்படும் என்றால், புண்ணே இல்லையென்றால் அமிலம் எதுக்களித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்ட உணவை வாந்தி எடுக்கும் நிலை ஏற்படும். ஆரோக்கியமான வாழ்வியலைப் பின்பற்றுவதுதான் நெஞ்செரிச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழி.

Fast Food
Fast Food

நேரத்துக்குத் தூங்குதல், நேரத்துக்கு சாப்பிடுதல், உடல் உழைப்பு என வாழ்க்கை முறையை சரி செய்வதன் மூலம் இப்பிரச்னையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இப்பிரச்னைக்கு ஆளான பிறகு, காரமான உணவுகளைத் தவிர்த்து தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலம் நெஞ்செரிச்சலைத் தடுக்க முடியும். மேற்சொன்ன்னவற்றை பின்பற்றியும் கூட நெஞ்செரிச்சல் குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். தேவைப்பட்டால் எண்டாஸ்கோபி செய்து பார்க்க வேண்டி வரும்” என்கிறார் கவிதா.