Published:Updated:

How to: பயணத்தில் செரிமானப் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid indigestion in travel?

செரிமானம்
News
செரிமானம்

பொதுவாக, நாம் பயணம் செய்யும்போது, ​​நமது உணவு, உறக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது, இது நமது செரிமான சுழற்சியை பாதிக்கிறது. பலர் கடுமையான செரிமானப் பிரச்னைகளால் பாதிக்கப்படும்படி செய்கிறது. அவற்றை தவிர்க்க ஆலோசனை கூறுகிறார் இரைப்பை குடல் மருத்துவர் மகாதேவன்.

Published:Updated:

How to: பயணத்தில் செரிமானப் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid indigestion in travel?

பொதுவாக, நாம் பயணம் செய்யும்போது, ​​நமது உணவு, உறக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது, இது நமது செரிமான சுழற்சியை பாதிக்கிறது. பலர் கடுமையான செரிமானப் பிரச்னைகளால் பாதிக்கப்படும்படி செய்கிறது. அவற்றை தவிர்க்க ஆலோசனை கூறுகிறார் இரைப்பை குடல் மருத்துவர் மகாதேவன்.

செரிமானம்
News
செரிமானம்

மனிதர்கள் நாடோடியாக வாழ்ந்து நவயுக நிலைக்கு மாறிய இந்நொடி வரை அவர்களுடன் துணை இருக்கும் ஒரு பழக்கம், இடம் விட்டு இடம் பெயர்தல். உணவுக்காகவும் வாழ்விற்காகவும் இடம்பெயரத் தொடங்கிய மனிதர்கள் இந்தக் காலத்தில் பொருளீட்டவும், மகிழ்ச்சிக்காகவும் எனப் பல காரணங்களுக்காக இடம்பெயர்தலைப் பயணம் என்ற பெயரில் சுருக்கி வலம் வருகின்றனர்.

செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)
செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)

ஏராளமான இன்பங்கள் பயணத்தின்போது பகிரப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்தின்போது எதிர்கொள்ளும் ஓர் இன்னல், அஜீரணம் மற்றும் வயிற்றுப் போக்கு. மலச்சிக்கல், வாயு ஆகிய காரணங்களால் பயண நேரங்களில் சிரமத்திற்கு ஆளாகி பயணத்தின் ருசியை அனுபவிக்க முடியாது பெரும்பாலானோர் தவிப்பதுண்டு.

பொதுவாக, நாம் பயணம் செய்யும்போது, ​​நமது உணவு, உறக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது, இது நமது செரிமான சுழற்சியை பாதிக்கிறது. பலர் கடுமையான செரிமானப் பிரச்னைகளால் பாதிக்கப்படும்படி செய்கிறது.
நாம் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போதோ, ​​பயணம் செய்யும்போதோ செரிமானப் பிரச்னையைத் தீர்க்க பல வழிகள் இருக்காது. எனவே செரிமான பிரச்னைகளை மனதில் கொண்டே பலரும் பயணத்தைத் தொடங்கவே பயப்படும் நிலையும் ஏற்படலாம்.

மகாதேவன், இரைப்பை குடல் மருத்துவர்
மகாதேவன், இரைப்பை குடல் மருத்துவர்

வயிற்று தொந்தரவுகள் தவிர்த்து சுமுகமாக பயணத்தை மேற்கொள்வது எப்படி எனச் சொல்கிறார், இரைப்பை குடல் மருத்துவர் மகாதேவன்.

இவற்றை செய்யுங்கள்...

1. பயணத்துக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்குங்கள்.

2. உங்கள் பயணத்தை காலை நேரத்தில் திட்டமிட முயலவும். முற்பகல் 11 மணிக்கு காலை உணவு, முன் மாலை 3 மணிக்கு மதிய உணவு என்றில்லாமல் அந்தந்த வேளை உணவை நேரத்துக்கு, தாமதிக்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.

3. பயணத்துக்கு முன்னும், பயணத்தின்போதும் அசைவ, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும். செரிக்கக் கடினமான உணவு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

4. முடிந்தால், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துச் செல்லலாம்.

5. பயணங்களில் ஜங்க் உணவுகளையும், உணவகங்களில் உணவருந்தும்போது புது வகை உணவுகளை ஆர்டர் செய்வதையும் தவிருங்கள். தேவைப்படும் அளவுக்கு அதிகமாக, வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.

ஜங்க் உணவு
ஜங்க் உணவு

6. போதுமான அளவு நீரேற்றம் செய்ய நிறைய பழங்கள், பழச்சாறு அல்லது இளநீர் பருகுங்கள். நார்ச்சத்து மிக்க உணவுகள் சிறப்பு.

7. பயணத்தின்போது ஏராளமான நொறுக்குத்தீனிகளைத் தவிருங்கள்.

8. வாந்தி பிரச்னை உள்ளவர்கள், பயணத்திற்கு முன் வாந்தி மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

9. அதிகப்படியான காஃபின், சாக்லேட் உட்கொள்வதை தவிர்க்கவும்.

உண்ட உணவில் சத்துகள் உள்ளனவா, அல்லது குப்பைகள் உள்ளனவா என்பதை அறிய குடல், மூளைக்கு உதவுவதால் வயிறு 'இரண்டாவது மூளை' என்றும் அழைக்கப்படுகிறது. செரிமான அமைப்பின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பல நியூரான்கள் குடலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Travel (Representational image)
Travel (Representational image)
Pixabay

இப்படி ஓர் இன்றியமையாத பங்கீட்டை நம் உடல் செயல்பாட்டுக்கு அளித்துவரும் செரிமான அமைப்பை பயணத்தின்போது உதாசீனம் செய்யாமல், சற்றதிக கவனம் கொடுத்துப் பார்த்துக்கொள்வோம்.