Published:Updated:

How to: மேக்கப் தவறுகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid Makeup Mistakes?

Makeup Mistakes You Must Avoid
News
Makeup Mistakes You Must Avoid

பெரும்பாலும் பலரும் தற்போது வீட்டிலேயே தங்களுக்கான மேக்கப்களை செய்துகொள்கின்றனர். தங்களுக்கு தாங்களே மேக்கப் செய்து கொள்வது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், அதில் சில விஷயங்களை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவசியம்.

Published:Updated:

How to: மேக்கப் தவறுகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid Makeup Mistakes?

பெரும்பாலும் பலரும் தற்போது வீட்டிலேயே தங்களுக்கான மேக்கப்களை செய்துகொள்கின்றனர். தங்களுக்கு தாங்களே மேக்கப் செய்து கொள்வது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், அதில் சில விஷயங்களை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவசியம்.

Makeup Mistakes You Must Avoid
News
Makeup Mistakes You Must Avoid

பெரும்பாலும் பலரும் தற்போது வீட்டிலேயே தங்களுக்கான மேக்கப்பை செய்துகொள்கின்றனர். தங்களுக்கு தாங்களே மேக்கப் செய்து கொள்வது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், அதில் சில விஷயங்களை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவசியம்.

make-up
make-up

மேக்கப்பில் தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா.

* வெளியே செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மேக்கப் போட்டு முடித்திருப்பது மிக நல்லது.

* எப்போதும், எடுத்தவுடன் நேரடியாக மேக்கப் போடுவது சரியான முறை இல்லை. மேக்கப் செய்வதற்கு முன்னதாக முகத்தை நன்றாக க்ளென்ஸிங் செய்ய வேண்டும். கூடவே டோனிங், ஹைடிரேட்டிங் போன்றவற்றை செய்திருக்க வேண்டும். இதன்மூலம் சருமம் பாதுகாக்கப்படும்.

* அடுத்ததாக ப்ரைமர். நல்ல தரமான ப்ரைமர் பயன்படுத்திய பின் மேக்கப் செய்ய ஆரம்பிக்கவும்.

* அன்றாடம் வெளியே செல்லும்போது, பணிக்குச் செல்லும்போது செய்யும் மேக்கப் என்றால், மெலிதான மேக்கப் நல்லது. இதற்கு பிரஷ் கூட தேவையில்லை, விரல்களே போதும்.

கண் மேக்கப்
கண் மேக்கப்

* இமைகளுக்கு எப்போதும் மஸ்காரா பயன்படுத்துங்கள்.

* ஏதேனும் விசேஷம், பார்ட்டிக்கு செல்வதாக இருந்தால் மட்டும் eye lashes பயன்படுத்தலாம்.

* தினமும் காஜல் பயன்படுத்துபவர்கள், வீடு திரும்பியதும் அதை ரிமூவ் செய்து, கண்ணைச் சுற்றி பால் அல்லது ஜெல் கொண்டு க்ளென்ஸிங் செய்யலாம்.

* பால் கொண்டு க்ளென்சிங் செய்ய, பஞ்சை பாலில் நனைத்து கண்களில் சில நிமிடங்கள் வைத்து, பின்னர் துடைத்து எடுத்து கழுவிவிடவும்.

* புருவத்திற்கு ஐபுரோ பென்சில் போதும். வீடு திரும்பியதும் முகம் கழுவிய பின்னர், தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல்லை புடவத்தில் தடவலாம்.

* தினமும் ஒரே கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தாமல், மாற்றி, மாற்றியோ, உடைக்கு ஏற்ற வண்ணத்திலோ பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

* முடிந்தவரை தினமும் கண்களுக்கான மேக்கப், லிப்ஸ்டிக் போன்றவற்றில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்துகொண்டால் ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.

* மேக்கப் ரிமூவ் செய்வதை தவறாமல் பின்பற்றவும். மேக்கப் ரிமூவர் கொண்டு மேக்கப்பை ரிமூவ் செய்த பின், முகத்தை நன்றாகக் கழுவவும். பின்னர் மறக்காமல் டோனர் பயன்படுத்தவும்.

இந்தச் சின்னச் சின்ன டிப்ஸ்களை எல்லாம் பின்பற்றி மேக்கப் போடும்போது மேக்கப் நீட் ஆக இருப்பதுடன், முக பராமரிப்பு சீராக இருக்கும், சரும பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.