Published:Updated:

How to: மாதவிடாய் நாள்கள் அலர்ஜியை தவிர்ப்பது எப்படி? I How to avoid rashes during periods?

Menstrual Hygiene (Representational image)
News
Menstrual Hygiene (Representational image)

மாதவிடாய் நாள்களில் மூட்ஸ்விங்ஸ், உடல் வலி, வயிற்று வலி போன்றவற்றுடன் அவஸ்தைப்படும்போது, இந்தப் பிரச்னைகளும் சேரும்போது அசௌகரியம் அதிகமாகும். மாதவிடாய் நாள்களில் அந்தரங்கப் பகுதியில் ஏற்படக்கூடிய ரேஷஸ் (rashes) தவிர்ப்பதற்கான ஆலோசனைகள் இங்கே.

மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஏற்படும் பலவித பிரச்னைகளில், அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பும், எரிச்சலும் முக்கியமானவை. ஏற்கெனவே மாதவிடாய் நாள்களில் மூட்ஸ்விங்ஸ், உடல் வலி, வயிற்று வலி போன்றவற்றுடன் அவஸ்தைப்படும்போது, இந்தப் பிரச்னைகளும் சேரும்போது அசௌகரியம் அதிகமாகும். மாதவிடாய் நாள்களில் அந்தரங்கப் பகுதியில் ஏற்படக்கூடிய ரேஷஸ் (rashes) தவிர்ப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுகிறார், சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

periods cramps
periods cramps
pexels - Sora shimazaki

காரணங்கள்...

* மாதவிடாய் நேரத்தில் பெண்களின் பிரைவேட் பகுதியில் ஏற்படக் கூடிய எரிச்சலுக்கும், அரிப்புக்குமான காரணங்களில் முக்கியமானது, ஈரப்பதம். அதிலும் இந்தியாவில் உள்ள கிளைமேட் புழுக்கமாக இருக்கக்கூடியது. இது, பாக்டீரியா, பூஞ்சை தொற்ற வழிவகுக்கும்.

* மாதவிடாய் நாள்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் இருக்கும் ஜெல், வடிவமைப்பு மற்றும் வாசனைக்கு சேர்க்கப்படும் ரசாயனங்கள் எல்லாம் அலர்ஜி ஏற்படுத்தக் காரணமாக அமையலாம்.

* உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, தொடைகளின் உராய்வு காரணமாகவும் இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்.

* மிகவும் இறுக்கமான, மற்றும் காட்டன் அல்லாத தரமற்ற உள்ளாடைகள் அணிவதும் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

doctor interview
doctor interview

தீர்வுகள்...

* அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, தடுப்பு போன்றவற்றுக்குத் தீர்வுபெற பயன்படுத்தக்கூடிய டஸ்டிங் பவுடர் உள்ளது . காலையில் குளித்ததும் இதனை ரேஷஸ் உள்ள பகுதியில் அப்ளை செய்யவும்.

* இரவு நேரத்தில், பிரைவேட் பார்ட்க்கு (private part) பயன்படுத்தும் ஆன்டி ஃபங்கல் க்ரீம் (anti fungal cream) பயன்படுத்தலாம். குறிப்பு: க்ரீமை நேரடியாக மருந்தகங்களில் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே வாங்க வேண்டும். காரணம், க்ரீம்களில் ஸ்டீராய்டு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால், மருத்துவ ஆலோசனை முக்கியம்.

* ரசாயனங்கள் இல்லாத காட்டன் நேப்கின்களைப் பயன்படுத்தலாம்.

* தரமற்ற உள்ளாடைகள் தவிர்த்து, காட்டன் உள்ளாடைகளை, தளர்வாக அணிய வேண்டும். இரவு நேரத்தில் உள்ளாடைகள் தவிர்க்கலாம்.