Published:Updated:

How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?

cell phone
News
cell phone

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே மொபைல் கவரை சுலபமாக சுத்தம் செய்ய முடியும். அதற்கான எளிய முறைகளை பார்க்கலாம்.

Published:Updated:

How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே மொபைல் கவரை சுலபமாக சுத்தம் செய்ய முடியும். அதற்கான எளிய முறைகளை பார்க்கலாம்.

cell phone
News
cell phone

நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பொருள்களில் முதலிடம் பெறுவது, மொபைல் போன். அந்தளவிற்கு நம்முடைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக அது மாறியுள்ளது. அதை சரியான முறையில் சுத்தம் செய்கிறோமோ என்றால், பெரும்பாலானோர் அதை செய்வதில்லை. குறிப்பாக மொபைலின் கவரை சுத்தம் செய்வதே இல்லை. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே எளிதாக அதை நம்மால் சுத்தம் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

wash
wash

சோப்பு, தண்ணீர்

தேவையான பொருள்கள்

* மைல்டு லிக்விட் சோப்

* பிரஷ்

* சுத்தமான துணி

செய்முறை

* ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும்.

* அதில் இரண்டு முதல் மூன்று சொட்டுகள் மைல்டு லிக்விட் சோப்பை சேர்க்கவும்.

* பின்பு அதில் மொபைல் கவரை ஊறவைத்து 10 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு மென்மையாகத் தேய்க்கவும்.

* சார்ஜ் போடும் இடம், மற்றும் கவரின் மூலைகளில் அழுக்குகள் சேர்ந்திருக்கும் என்பதால் கவனம் கொடுத்து க்ளீன் செய்யவும். *

* தேய்த்த பின் பைப் நீரில் நன்றாகக் கழுவவும். பின்பு அதனை சுத்தமான துணி கொண்டு துடைத்து எடுத்தால் பளிச்சென இருக்கும். துடைத்த பின் உடனடியாக மொபைலில் பயன்படுத்தாமல், ஒரு மணி நேரம் வரை நன்கு உலரவிட்டு பின்பு பயன்படுத்தவும்.

ஸ்பிரே

தேவையான பொருள்கள்

* ஆல்கஹால் கலந்த ஸ்பிரே

* மைக்ரோ ஃபைபர் துணி

மொபைல் போன்
மொபைல் போன்

செய்முறை

* சுத்தமான மைக்ரோ ஃபைபர் துணியில், ஆல்கஹால் கலந்த, சுத்தம் செய்யும் ஸ்பிரேயை கொஞ்சம் ஸ்பிரே செய்து கொள்ளவும்.

* அதனை கொண்டு மொபைல் கவரை உட்புறம் வெளிப்புறம் என வட்டவடிவில் தேய்க்கவும்.

* ரொம்ப அழுத்தமாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் அழுக்குகள் மற்றும் கறைகள் நீங்கும் வண்ணம் தேய்த்து எடுக்கவும். எக்காரணம் கொண்டு நேரடியாக கவரில் ஸ்பிரே செய்வதோ, ஸ்பிரேயில் கவரை ஊற வைப்பதோ வேண்டாம்.

* முழுவதும் தேய்த்து எடுத்த பின், மற்றொரு ஈரமில்லாத மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு துடைக்கவும்.

* அழுக்குகள் நீங்கி சுத்தமாக இருக்கும். இதனை உடனடியாக பயன்படுத்தாமல் நன்றாக உலரவிட்டு பின்பு பயன்படுத்தவும்.

பேக்கிங் சோடா

தேவையான பொருள்கள்

* பேக்கிங் சோடா

* வெந்நீர்

* பிரஷ்

How To: மொபைல்போன் கவரை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean Mobile Phone Cover?

செய்முறை

* போனில் இருந்து கவரை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். கவரில் கறை இருக்கும் பகுதிகளில் பேக்கிங் சோடாவை தூவிக்கொள்ளவும்.

* 3 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். பின்பு, ஒரு டூத் பிரஷ் கொண்டு கறை இருக்கும் இடங்களில் தேய்க்கவும். மென்மையாகத் தேய்த்து கறைகளை நீக்கவும்.

* வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர் நன்றாக உலரவிட்டுப் பயன்படுத்தவும்.

மொபைல் கவர் தினமும் பயன்படுத்தும் பொருள் என்பதாலும், சீக்கிரமாக அழுக்காகும், கிருமிகளின் தாக்கம் ஏற்படும் என்பதாலும் வாரத்திற்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வது நல்லது.