Published:Updated:

How To: குறுகிய நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean House In Short Time?

Cleaning
News
Cleaning

ஓய்வு எடுப்பதற்காக இருக்கும் விடுமுறை நாள் முழுவதையும் வீட்டை சுத்தம் செய்வதிலேயே செலவிட முடியாது. அந்த நாளில் மிகக் குறுகிய நேரத்திலேயே வீட்டை சுத்தம் செய்து முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்...

Published:Updated:

How To: குறுகிய நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது எப்படி? | How To Clean House In Short Time?

ஓய்வு எடுப்பதற்காக இருக்கும் விடுமுறை நாள் முழுவதையும் வீட்டை சுத்தம் செய்வதிலேயே செலவிட முடியாது. அந்த நாளில் மிகக் குறுகிய நேரத்திலேயே வீட்டை சுத்தம் செய்து முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்...

Cleaning
News
Cleaning

வீட்டை பொறுத்தவரை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும், தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும். அதுவும் தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பணி, படிப்பு என்று சென்றுவிட, கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் வீட்டினை சுத்தம் செய்வதிலேயே போய்விடுகிறது பலருக்கு. அதை தவிர்த்து மிகக் குறுகிய நேரத்திலேயே வீட்டை சுத்தம் செய்து முடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்...

cleaning
cleaning

* முதலில் சுத்தம் செய்வதற்குத் தேவையான துடைப்பம், கிருமிநாசினி திரவம், ஒட்டடை அடிக்கும் குச்சி, Micro fibre துணி போன்ற அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* தனியாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டாம். எப்போது சுத்தம் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, ஆளுக்கு ஒரு பணியாக, வேலைகளைப் பிரித்துக்கொண்டு செய்யவும்.

* வேலையைத் துவங்கும் முன்பு, எது தேவையான பொருள்கள், எவையெல்லாம் தேவையில்லாத பொருள்கள் என்று பிரித்து, மறு யோசனையே இல்லாமல் அவற்றை அப்புறப்படுத்தவும்.

* மொபைல், டிவியில் பாடல் ப்ளே செய்து அதை கேட்டபடியே சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கலாம். ஆனால், மொபைலை கையில் எடுத்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று பார்க்க ஆரம்பித்தால் மீண்டும் அதை கீழே வைப்பதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பது உங்கள் கன்ட்ரோலில் இருக்காது. எனவே அதை தவிர்க்கவும்.

* தூசுகள் மற்ற பொருள்களின் மேல் படாமல் இருக்க, அவற்றின் மேல் துணிகளையோ, பழைய பேப்பர்களையோ கொண்டு மூடவும். இல்லையெனில் அவற்றின் மீது தூசி படிந்து அவற்றை மறுசுத்தம் செய்ய வேண்டி வரும்.

* ஃபேன், ஜன்னல் என மேலே உள்ள பொருள்களை துடைத்த பின்பு கீழே உள்ள பொருள்களை துடைத்து வைக்கவும். தூசுகளை துடைக்கும்போது மின்விசிறிகளை ஆஃப் செய்து வைக்கவும்.

Cleaning
Cleaning
Pixabay

* சமையலறையில் அடுப்பு உள்ள பகுதியை துடைத்து எடுத்த பின், எண்ணெய் பிசுக்கை நீக்குவதற்கு அதற்குரிய லிக்விட் தெளித்து ஊறவைக்கவும். பின்பு கிச்சன் சிங்க், வாஷ் பேஸின்களில் ஆசிட்/லிக்விட் தெளித்து ஊறவைக்கவும். அப்படியே கழிவறை டைல்ஸ் பகுதிகளில் கிருமிநாசினியை தெளித்து ஊறவைக்கவும். பிறகு அதே வரிசையில் சுத்தம் செய்ய ஆரம்பிக்கவும்.

* வீடு சுத்தம் செய்ததை தொடர்ந்து கூடவே, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருள்களையும் உடனே சுத்தம் செய்து வைக்கவும். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் உடனே செய்து விட்டால் ஓய்வு நாளில் சிறிதளவே வேலை இருக்கும்.