Published:Updated:

How to: வெள்ளை ஷூக்களை பளிச்சிடச் செய்வது எப்படி? | How To Clean White Shoes?

Shoe
News
Shoe

வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை பளிச் என பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான ஒன்று. வீட்டிலேயே இருக்கும் சில பொருள்களைக் கொண்டு, எளிதாக அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்...

Published:Updated:

How to: வெள்ளை ஷூக்களை பளிச்சிடச் செய்வது எப்படி? | How To Clean White Shoes?

வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை பளிச் என பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான ஒன்று. வீட்டிலேயே இருக்கும் சில பொருள்களைக் கொண்டு, எளிதாக அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்...

Shoe
News
Shoe

பொதுவாக நமக்கு வெள்ளை நிறத்தின் மீதான நாட்டம் அதிகம். வேட்டி உள்ளிட்ட வெள்ளை உடைகள் மங்கியிருந்தால் பிடிக்காது; தும்பைப்பூ வெண்மையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேபோல், நாம் வாங்கிய வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அதை பளிச் என மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான ஒன்று. வீட்டிலேயே இருக்கும் சில பொருள்களைக் கொண்டு, எளிதாக அதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்...

வெதுவெதுப்பான சோப்புநீர்

லெதர் ஷூ, க்ராக்ஸ் என எந்த மெட்டீரியல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்யவும், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்பு ஒரு துணி அல்லது பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி, ஷூ சுத்தமாகும் வரை மெதுவாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் அதிகப்படியாக உள்ள தண்ணீரைத் துடைத்து, ஈரம் காய காற்றில் நன்கு உலர வைத்து எடுங்கள். பழுப்புக்கு பை சொல்லி வெள்ளை நிறம் மீண்டிருக்கும்.

Tooth brush
Tooth brush
Pixabay

பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர்

இந்த இரண்டும் கேன்வாஸ் ஷூக்களை சுத்தம் செய்ய சிறந்தது. மற்ற வகை ஷூக்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீரில், ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போல உருவாக்கவும். பின்பு பிரெஷ் கொண்டு அதில் தோய்த்து எடுத்து, அதைக் கொண்டு ஷூவை வட்ட வடிவில் மசாஜ் செய்வது போன்று தேய்க்கவும். எல்லா பக்கமும் இப்படியே சுத்தம் செய்யவும். சில மணி நேரம் அப்படியே காயவிட்டு, அந்த பேஸ்ட்டை ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்து, அல்லது ஷூவைக் கழுவி எடுத்து நிழலில் நன்கு உலர்த்திப் பயன்படுத்தவும்.

டூத்பேஸ்ட்

ஷூக்களை பளிச்சிடச் செய்ய, வெள்ளை க்ரீம் உள்ள டூத்பேஸ்ட்டை பயன்படுத்தலாம். டூத்பிரஷ்ஷில் டூத்பேஸ்ட்டை எடுத்து, வட்ட வடிவில் ஷூ முழுக்க, குறிப்பாக அதிகக் கறை உள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தேய்க்கலாம். 10 நிமிடங்கள் அப்படியே காயவிட்டு, ஈரமான துணியைக் கொண்டு துடைக்கவும். துடைத்த பின்னர் அழுக்குகள் இருந்தால் அந்த இடத்தில் மட்டும் மீண்டும் ரிப்பீட் செய்து, ஈரத்துணி கொண்டு துடைத்து, நன்கு உலர வைத்துப் பயன்படுத்தவும்.

எலுமிச்சை சாறு

ஓர் எலுமிச்சை பழம் எடுத்து அதன் சாற்றை ஒரு பவுல் நிறைய நீரில் கலந்துகொள்ளவும். பின்னர் அந்த நீரை எடுத்து அழுக்கான ஷூ மீது வட்டவடிவில் தேய்க்கவும். தேய்த்த ஷூவை வெயிலில் ஒரு மணிநேரம் வைத்திருந்து, பின்னர் கழுவவும்.

எலுமிச்சை
எலுமிச்சை
pixabay

ப்ளீச்சிங் ஏஜென்ட் கொண்டு தூய்மை

ஒரு பங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டுடன் ஐந்து பங்கு தண்ணீர் கலக்கவும் (அதிகமாக ப்ளீச்சிங் ஏஜென்ட் சேர்ப்பது காலணிகளை மஞ்சள் நிறமாக மாற்றும்). ஒரு திறந்த, காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து, கைகளுக்கு கிளவுஸ் போட்டபடி, கலவையை ஷூவை சுத்தம் செய்யப் பயன்படுத்தவும். டூத்பிரஷ்ஷில் கலவையை எடுத்து ஷூவில் வட்ட வடிவில் தேய்க்கவும். தொடர்ந்து சாதாரண நீரில் கழுவிய பின்பு 5 மணி நேரம் ஈரம் காய நன்கு உலர விட்டு பின்பு பயன்படுத்தவும்.

குறிப்பு

* ஒவ்வொரு வாரமும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் ஷூக்களை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது அதிகமாக அழுக்கானல், சுத்தம் செய்யும் நேரமும் அதிகமாகும்.

* ஷூ சேதப்படும் என்பதால் வாஷிங்மெஷினில் ஷூக்களை போட்டு சுத்தப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

* ஷூவில் அழுக்கு பட்டாலோ, ஏதேனும் திரவங்கள் பட்டாலோ உடனே சுத்தம் செய்யவும்.