Published:Updated:

How to series: முகத்தில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி? | How to clear blackheads naturally?

blackhead removal
News
blackhead removal

``கரும்புள்ளி, வெண்புள்ளி இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால், கரும்புள்ளிகளில் மேல் ஒரு துளை சிறிதாக இருக்கும். அதனால் அவற்றை நம்மால் வெளியே எடுத்துவிட முடியும். ஆனால் வெண்புள்ளியை நம்மால் அப்படி எடுத்துவிட முடியது."

Published:Updated:

How to series: முகத்தில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி? | How to clear blackheads naturally?

``கரும்புள்ளி, வெண்புள்ளி இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால், கரும்புள்ளிகளில் மேல் ஒரு துளை சிறிதாக இருக்கும். அதனால் அவற்றை நம்மால் வெளியே எடுத்துவிட முடியும். ஆனால் வெண்புள்ளியை நம்மால் அப்படி எடுத்துவிட முடியது."

blackhead removal
News
blackhead removal

ஆண், பெண் என இருவருக்குமே முகத்தின் தாடைப் பகுதியிலும், மூக்கின் மேல் பகுதியிலும் உருவாகும் வெண்புள்ளிகளையும், கரும்புள்ளிகளையும் நீக்குவது என்பது பலருக்கும் கடினமான ஒரு விஷயமே. முகத்தில் அதிகமாக சேரக்கூடிய எண்ணெய் பசையாலும், ஈரப்பதம் குறைவாக இருப்பதனாலும் இதுபோன்று கரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் முகத்தில் ஏற்படக்கூடும். இதை எளிய முறையில் வீட்டிலேயே நீக்குவது குறித்த வழிமுறைகளைக் கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

கரும்புள்ளி, வெண்புள்ளி... இதுதான் வித்தியாசம்!

``கரும்புள்ளி, வெண்புள்ளி இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால், கரும்புள்ளிகளில் மேல் ஒரு துளை சிறிதாக இருக்கும். அதனால் அவற்றை நம்மால் வெளியே எடுத்துவிட முடியும். ஆனால் வெண்புள்ளியை நம்மால் அப்படி எடுத்துவிட முடியது. அதன் மேற்புறத்தில் துளை இல்லாததால் அது அப்படியே உடலின் உள்ளே அமுங்கிவிடும். கரும்புள்ளிகள் எண்ணெய்ப்பசை அதிகமாக இருப்பதாலும், வெண்புள்ளிகள் ஈரப்பதம் இல்லாமையாலும் முகத்தில் ஏற்படுகிறது. இவை முகத்தின் அழகை குறைப்பதுடன், இவற்றை அவ்வளவு எளிதாக நீங்காது. ஆனால் சில பொருட்களை கொண்டு இவற்றை வீட்டிலேயே நீக்கிட பின்வரும் செயல்முறைகளைப் பின்பற்றலாம்.

ஸ்டெப் 1:

முதலில் வெந்நீரில் முகத்திற்கு ஆவி பிடித்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களிடம் ஸ்டீமர் இருந்தால், அதை ஓர் அடி முகத்தில் இருந்து விலக்கி வைத்து ஆவிபிடித்துக் கொள்ளவும். இல்லையென்றால், சூடான நீரில் துணியை நனைத்து அதை முகத்தில் ஒத்தடம் கொடுத்து எடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் மூக்கின் மேல் இருக்கும் துளைகள் திறக்கும்.

ஸ்டெப் 2:

கரும்புள்ளிகளை வெளியே எடுக்கும் `சக்சன்' (suction) என்ற கருவி கடைகளில் கிடைக்கும். ஆவி பிடித்த பின் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால், மிக எளிதாக கரும்புள்ளிகள், வெண்புள்ளிகளை நீக்கிவிடும்.

இந்தக் கருவி எல்லாரிடமும் இருக்காது என்பதால், இதற்கு மாற்றாக வீட்டிலேயே எப்படி அவற்றை நீக்கலாம். என்பதை பார்க்கலாம்.

பிளாக்ஹெட்ஸ், வொயிட்ஹெட்ஸை வீட்டிலேயே நீக்க முதலில் ஒரு ஸ்கிரப் பயன்படுத்த வேண்டும். பின் ஒரு பேக் பயன்படுத்த வேண்டும். நாம் பயம்படுத்தும் பேக் சிறிது நேரம் அப்படியே ஊற வேண்டும் என்பதால் முதலில் அதனை தயார் செய்து கொள்ளலாம்.

பேக் செய்ய தேவையான பொருட்கள்
பேக் செய்ய தேவையான பொருட்கள்

பேக் செய்ய தேவையான பொருள்கள்:

ஜெலட்டின்- 1 டீஸ்பூன்
சுடுநீர் - தேவையான அளவு
சோளமாவு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

ஜெலட்டினை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, அதில் கொஞ்சமாக வெந்நீரை கலந்து கொள்ளவும். பின் அதில் சோளமாவு, தேன் கலந்து சிறிது நேரம் அப்படியே ஊறவிடவும். இந்த ஜெலட்டின் - சோளமாவு - தேன் கலந்த பேஸ்ட் கரும்புள்ளிகளை வெளியேற்ற உதவும்.

ஸ்கிரப் செய்ய தேவையான பொருள்கள்:

சார்கோல் பொடி - 1/4 டீஸ்பூன்
குளுக்கோஸ் - 1/4 டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் - சிறிதளவு

ஆக்டிவேட்டேட் சார்கோல் என்று கடைகளில் கேட்டு வாங்கிக்கொள்ளவும். அதனை 1/4 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் குளுக்கோஸ் சேர்த்து, ரோஸ்வாட்டர் சில துளிகள் விட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் 3:

ஏற்கெனவே ஆவிபிடிக்கப்பட்டு இருக்கும் மூக்கின் மீது, இந்த ஸ்கிரப்பை கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவிக்கொள்ளவும். தடவிய பின் ரொம்ப மிருதுவாக விரல்களால் வட்டமாகத் தேய்த்துவிடவும். ஒருவேளை உங்களிடம் சார்கோல் இல்லையென்றால், அதற்கு மாற்றாக கடலைமாவை பயன்படுத்தலாம். ஸ்கிரப் அப்ளை செய்து தேய்த்த பின்னர் உடனே எடுத்துவிடலாம். இதனைச் செய்யும்போது உள்ளே இருக்கும் கரும்புள்ளிகள் எல்லாம் வந்துவிடும்; மறுமுறை வருவது தவிர்க்கப்படும்.

ஸ்டெப் 4

ஸ்கிரப்பை எடுத்த பின் ஜெலட்டின் சேர்த்து செய்து வைத்திருக்கும் பேஸ்ட்டை, மூக்கின் மேலே அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் கழித்து அதன் மேல் மெதுவாக மசாஜ் செய்து கொள்ளலாம் . பின் இரண்டு நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின் பேஸ்ட்டை முழுவதுமாகத் துணி கொண்டு துடைத்து எடுக்கவும். இதன் மூலம் மூக்கின் சருமம் ரொம்பவே சாஃப்ட் ஆகியிருக்கும்.

ஸ்டெப் 5:

பின் முல்தானி மட்டி -1 டீஸ்பூன், அரிசிமாவு 1- டீஸ்பூன் , சாமந்திப்பூ வாட்டர்- சிறிதளவு சேர்த்துக் கலந்து பேஸ்ட் ஆக்கவும். அதனை, சாஃப்ட் ஆகியிருக்கும் மூக்கின் சருமம் மீது அப்ளை செய்து 5 நிமிடத்திற்குப் பின் எடுத்தால், நிச்சயமாக கரும்புள்ளிகள் நீக்கப்பட்டு, ஸ்கின் சாஃப்ட்டாக இருக்கும்.

இவ்வாறு மூன்று ஸ்டெப்கள் செய்ய, நல்ல மாற்றத்தை உணர முடியும். கரும்புள்ளிகள் நீங்கிவிட்டதாக அப்படியே விடக்கூடாது. தினமும் இரவில் தூங்குவதற்கு முன் மூக்கின் மீது சாமந்தி பூ வாட்டரையோ, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் டோனரையோ தவறாமல் பயன்படுத்தவேண்டும். இது நிச்சயமாக கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்கும்'' என்றார்.