Published:Updated:

How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands?

Hands Care
News
Hands Care

வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்குவது கையில் உள்ள சருமத்தை மென்மையாக்குவதுடன் பொலிவுடனும் இருக்கச் செய்யும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே அந்தப் பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகாட்டல் இங்கே...

பராமரிப்பு என்பது முகத்துக்கும் கேசத்துக்கும் மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது சிறப்பு. குறிப்பாக, வெயிலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் கை மற்றும் கால்களுக்கு சீரான இடைவெளியில் பராமரிப்புக் கொடுக்க வேண்டும்.

Hands (Representational image)
Hands (Representational image)
Pixabay

வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்குவது கையில் உள்ள சருமத்தை மென்மையாக்குவதுடன் பொலிவுடனும் இருக்கச் செய்யும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே அந்தப் பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகாட்டல் இங்கே...

பால்

பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முன் கைகளை நன்றாக ஸ்கிரப் செய்து கொள்ளவும். ஓர் அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் பாலை சேர்க்கவும். அதனுடன் வாசனைக்கு தேவைபட்டால் இரண்டு சொட்டு ரோஸ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கலவையில் 15 - 20 நிமிடங்களுக்குக் கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவவும். இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

Milk
Milk
Photo by ROBIN WORRALL on Unsplash

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. இது சருமப் பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. இதனை பயன்படுத்தும்போது சரும சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும். அன்னாசி பழத்தின் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும்.

அரிசி மாவு

அரிசி உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல, வெளிப்புறத்தில் சருமம், கேசத்துக்கும் சிறந்த பலங்களை தரக்கூடியது. அரிசி மாவையோ ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் நீரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இதனை கைகளில் சுருக்கம் உள்ள பகுதிகளில் தடவி நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உடனடியாக சருமம் ஸ்மூத்தாக மாறியதை உணரலாம். தொடர்ந்து இதுபோல செய்து வந்தால் சுருக்கங்கள் நன்றாகக் குறைய தொடங்கும்.

Banana
Banana

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகளானது சருமத்துக்கு அவசியமானது. சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதில் பெரும் உதவி புரியக்கூடியது. வாழைப்பழத்தை சிறிது சிறிதாக வெட்டி அதனை பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை சுருக்கம் உள்ள இடத்தில் தடவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் வெதுவெதுப்பாக இருக்கும் நீரில் கைகளை அலசவும். இதனை தொடர்ந்து செய்து வர கைகளின் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைவதை உணர முடியும்.