Published:Updated:

How to: வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி? | How to do manicure at home?

Nails (Representational Image)
News
Nails (Representational Image) ( Pixabay )

நம்மில் பலருக்கும் மெனிக்யூர் பற்றி தெரிந்திருந்தாலும், அந்த சிகிச்சையை பியூட்டி பார்லரில்தான் செய்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். எளிய முறையில் வீட்டிலேயே மெனிக்யூர் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே..

Published:Updated:

How to: வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி? | How to do manicure at home?

நம்மில் பலருக்கும் மெனிக்யூர் பற்றி தெரிந்திருந்தாலும், அந்த சிகிச்சையை பியூட்டி பார்லரில்தான் செய்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். எளிய முறையில் வீட்டிலேயே மெனிக்யூர் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே..

Nails (Representational Image)
News
Nails (Representational Image) ( Pixabay )

உடலின் மற்ற பகுதிகளைப் பராமரிப்பது போல நகப் பராமரிப்புக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நகப் பராமரிப்பு செயல்முறையான `மெனிக்யூர்'-ஐ (manicure) எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் மெனிக்யூர் பற்றி தெரிந்திருந்தாலும், அந்த சிகிச்சையை பியூட்டி பார்லரில்தான் செய்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதனாலேயே இந்தப் பராமரிப்புக்கான நேரத்தையோ, பட்ஜெட்டையோ பெண்கள் ஒதுக்காமல் தவிர்க்கின்றனர். தயக்கம் வேண்டாம். எளிய முறையில் வீட்டிலேயே மெனிக்யூர் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே..

```Nails (Representational Image)
```Nails (Representational Image)
Pixabay

மெனிக்யூர் செய்வதில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பொருள்கள்.

கட்(Nail cut), ஃபைல்(nail file), பாலிஷுக்கு(nail polish):
- நகம் வெட்டி
- நெயில் ஃபைலர் (Nail filer)
- நெயில் பாலிஷ் (Nail polish)

நகங்களை ஊற வைப்பதற்கு (nail soak)
- ஆழமற்ற டப் அல்லது அகலமானபாத்திரம்
- ஷாம்பூ அல்லது பாடி வாஷ்
- எலுமிச்சை சாறு
- தேன்

நகங்களை ஸ்கிரப் செய்ய
- சர்க்கரை
- எலுமிச்சை சாறு
- ஆலிவ் எண்ணெய்

செயல்முறை:

1. நகத்தை தயார் செய்வது

* மெனிக்யூர் செய்வதற்கு முன் கைகளை நன்றாக சோப் கொண்டு கழுவவும். பின்னர், நகங்களில் இருக்கும் பழைய நெயில் பாலிஷை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் மற்றும் மென்மையான காட்டன் கொண்டு அகற்றவும்.

Nails (Representational Image)
Nails (Representational Image)
Pixabay

* அடுத்து, நீளத்தைக் குறைக்க நகங்களின் விளிம்புகளை தேவையான அளவு வெட்டி, மூலைகளை வட்டம், சதுரம், ஓவல் என விரும்பும் வடிவத்திற்கு ஏற்ப வெட்டவும்.

* நகத்தின் விளிம்புகளில் ஃபைலரை (nail filer) மிருதுவாகத் தேய்த்து நகத்தை ஸ்மூத் ஆக்கவும். ஃபைலரை எதிரெதிர் திசைகளில் முன்னும் பின்னுமாக ஸ்வைப் செய்தால் நகத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால் தவிர்த்து, ஒரே திசையில் ஃபைல் செய்யவும்.

2. நகங்களை ஊறவைக்கவும்
அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்க்கவும். எலுமிச்சை சாறு நகத்தை பதப்படுத்துவதுடன் அழுக்குகள் நீக்கும். தேன் அற்புதமான மாய்ஸ்சரைஸராக செயல்படும். இந்தக் கலவையில் உங்கள் கைகளை குறைந்தபட்சம் 5 - 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கைகள் மென்மையான பிறகு எடுத்து தண்ணீரை துடைத்தெடுத்து, சிறிது ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவவும்.

3. ஸ்கிரப்
எலுமிச்சை, சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்தால், ஸ்கிரப் ரெடி. இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். அதைக் கொண்டு விரல்கள், கைகளை மிருதுவாக ஸ்கிரப் செய்யவும். இது இறந்த சரும செல்களை நீக்கும். ஆலிவ் எண்ணெய் கைகள், விரல்களுக்கு ஈரப்பதம் கொடுக்கும்.

ஸ்கிரப்பை நகக்கண்களில் வைத்து மெதுவாக 2 நிமிடங்களுக்கு வட்டவடிவில் மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஸ்கிரப்பிங் முடிந்ததும் வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவவும். மென்மையான துணி கொண்டு உலர்த்தவும்.

Nails (Representational Image)
Nails (Representational Image)
Pixabay

4. பாலிஷ்
மேற்சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் முடிந்த பின்னர், இப்போது நகங்களை பாலிஷ் செய்ய வேண்டும். இதற்கு நெயில் பாலிஷ்களை பயன்படுத்தவும். விரும்புபவர்கள் நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம்.

மெனிக்யூர் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

* இறந்த செல்களை நீக்கி விரல்களை மிருதுவாக்கும். வறட்சி, சுருக்கங்கள் மறையும்.

* நகக்கண்களில் செய்யப்படும் மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* நகத்தில் தொற்று எதுவும் இருந்தால் நீக்கி சுத்தமாக்கும், குணமாக்கும்.

* ரெகுலராக மெனிக்யூர் செய்வது நகம், விரல், கைகளின் அழகு, ஆரோக்கியப் பராமரிப்புக்குக் கைக்கொடுக்கும்.