Published:Updated:

How to: வீட்டிலேயே தியானம் செய்யப் பழகுவது எப்படி? | How to do meditation at home?

Meditation (Representational Image)
News
Meditation (Representational Image) ( Photo by Prasanth Inturi from Pexels )

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் ஆரம்பித்து அதிகபட்சம் 2 மணி நேரம் வரைகூட தியானம் மேற்கொள்ளலாம். ஆனால், நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

Published:Updated:

How to: வீட்டிலேயே தியானம் செய்யப் பழகுவது எப்படி? | How to do meditation at home?

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் ஆரம்பித்து அதிகபட்சம் 2 மணி நேரம் வரைகூட தியானம் மேற்கொள்ளலாம். ஆனால், நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

Meditation (Representational Image)
News
Meditation (Representational Image) ( Photo by Prasanth Inturi from Pexels )

தற்போது மக்களில் பலருக்கு உடலளவில் ஏற்படும் பிரச்னைகளைவிட உளவியல் ரீதியான பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. பணிச்சுமை, குடும்பச்சூழல், கடன் பிரச்னை, காதல் எனப் பல விஷயங்கள் மனஅழுத்தம், சோர்வு, அதீத கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக, மனநலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், மனதை அமைதிப்படுத்த வேண்டும், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தை வீட்டிலேயே செய்யப்பழகுவதற்கான எளிய வழிகாட்டல் இங்கே...

Meditation (Representational Image)
Meditation (Representational Image)
Pixabay

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் ஆரம்பித்து அதிகபட்சம் 2 மணி நேரம் வரைகூட தியானம் மேற்கொள்ளலாம். ஆனால், நேரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும். தியானம் செய்வது என்று முடிவெடுத்தாலும் அதற்குரிய சில சிறிய வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்...

1. இடம் தேர்வு செய்தல்:

- தியானம் செய்வதற்கு மிக முக்கியத் தேவை, இடம். வீட்டில் உங்களுக்குப் பிடித்த இடத்தை, தொந்தரவில்லாத, அமைதியான, இடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

2. நேரத்தை முடிவு செய்தல்:

- எவ்வளவு நேரம் நீங்கள் தியானம் மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ளவும். இப்படி முடிவு செய்யும் பட்சத்தில் மனது அதற்குத் தயாராக முயற்சி மேற்கொள்ளும்.

Meditation (Representational Image)
Meditation (Representational Image)
Pixabay

3. உங்கள் உடலைக் கவனியுங்கள்:

- நீங்கள் ஒரு நாற்காலியில் உங்கள் கால்களைத் தரையில் ஊன்றி உட்காரலாம். அல்லது சம்மணம் இட்டோ, உங்களுக்கு எப்படி உட்காரத் தோன்றுகிறதோ, உட்கார முடிகிறதோ அந்த நிலையில உட்கார்ந்துகொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிலையில் குறிப்பிட்ட நேரம் வரை தொடர்ந்து இருக்க முடியுமா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அமரும் நிலை உங்களுக்கு வசதியாக இருந்தால்தான் தியானம் மேற்கொள்ள முடியும்.

4. மூச்சுப் பயிற்சி:

- இடம் பார்த்து, உங்களுக்கு வசதியான நிலையில் அமர்ந்த பின் முதலில் மூச்சுப்பயிற்சியை மேற்கொள்ளவும். அது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

5. மனதை ஒருநிலைப்படுத்துங்கள்:

- மூச்சுப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது, மனம் அலைபாய்வதை உணர முடியும். மூச்சுப்பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் செய்து வாருங்கள். அப்போது உங்களுடைய சிந்தனையை மூச்சை வெளியிடுவதிலும், உள் இழுப்பதிலும் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துங்கள்.

Meditation (Representational Image)
Meditation (Representational Image)
Pixabay

6. தியானம் ஆரம்பம்:

- நடந்து முடிந்த விஷயங்கள், உங்களுக்குள் இருக்கும் கவலைகள் என எதையும் நினைக்காமல் இருக்க முயலுங்கள். பிடித்த ஒரு மந்திரச் சொல்லை மனதுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லியபடியே மனதை ஒருநிலைப்படுத்துங்கள். கைவிரல்களில் ஏதாவது ஒரு முத்திரையை வைத்தபடி தியானத்தை மேற்கொள்ளலாம். விரும்பினால் மெல்லிய இசையை ஒலிக்க விடலாம்.

தினமும் இதுபோல் செய்துவர, கொஞ்சம் கொஞ்சமாக மனது தியானத்துக்குப் பழக ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்துவர, தியானம் வசப்படும்.