Published:Updated:

ஆண்கள் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி? | How to Find Best Hair Style For Men's Face Shape?

Hair Style For Your Face Shape
News
Hair Style For Your Face Shape

தலையின் பின்பகுதியில் இரட்டை சுழி இருப்பவர்கள், மீடியம் அளவில் கேசம் இருப்பதுபோல கட் செய்ய வேண்டும், அல்லது மொத்தமாக ஷார்ட்டாக கட் செய்ய வேண்டும். இல்லையென்றேல் சுழி இருக்கும் இடத்தில் மட்டும் கேசம் படியாமல் தூக்கிக்கொண்டே இருக்கும்.

Published:Updated:

ஆண்கள் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி? | How to Find Best Hair Style For Men's Face Shape?

தலையின் பின்பகுதியில் இரட்டை சுழி இருப்பவர்கள், மீடியம் அளவில் கேசம் இருப்பதுபோல கட் செய்ய வேண்டும், அல்லது மொத்தமாக ஷார்ட்டாக கட் செய்ய வேண்டும். இல்லையென்றேல் சுழி இருக்கும் இடத்தில் மட்டும் கேசம் படியாமல் தூக்கிக்கொண்டே இருக்கும்.

Hair Style For Your Face Shape
News
Hair Style For Your Face Shape

ஆண்கள் தங்கள் முக அமைப்புக்கு ஏற்றதாகவும், எளிதாகப் பராமரிக்கக்கூடிய வகையிலும் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து பகிர்கிறார், நேச்சுரல்ஸ் சலூனை சேர்ந்த கார்த்திக் ராமமூர்த்தி.

1. ஹேர்கட்டை தேர்வு செய்யும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முக அமைப்பு, கேசம் வளரும் தன்மை, பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர், முடியின் அடர்த்தி போன்றவை அவற்றில் முக்கியமானவை.

கார்த்திக் ராமமூர்த்தி
கார்த்திக் ராமமூர்த்தி

2. முக அமைப்பு சதுர வடிவில் இருப்பது ஆண்களுக்கு அழகாக இருக்கும். அவர்கள் கேசத்துடன் கூடவே தாடியையும் ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். முக்கோண வடிவில் முகம் இருப்பவர்கள், அதற்கு ஏற்றார் போல் ஹேர்ஸ்டைலிங் செய்துகொள்ள வேண்டும்.

3. முன் நெற்றியில் கேசம் குறைவாக இருக்கிறது, சுழி இருக்கிறது என்றால், நெற்றியின் முன்பகுதியில் கேசத்தை அதிகமாக வெட்டக் கூடாது.

4. தலையின் பின்பகுதியில் இரட்டை சுழி இருப்பவர்கள், மீடியம் அளவில் கேசம் இருப்பதுபோல கட் செய்ய வேண்டும், அல்லது மொத்தமாக ஷார்ட்டாக கட் செய்ய வேண்டும். இல்லையென்றால் சுழி இருக்கும் இடத்தில் மட்டும் கேசம் படியாமல் தூக்கிக்கொண்டே இருக்கும்.

Hairstyle
Hairstyle

5. வட்ட வடிவில் முகம் இருப்பவர்களுக்குத் தாடை பெரிதாக இருக்கும். இவர்கள் ஷார்ட் ஹேர்கட் செய்தல் கூடாது. மிகவும் சிறியதாக முக அமைப்புக் கொண்டவர்கள், `ஸ்பைக்' போல பின்னோக்கி ஏற்றி சீவிக்கொள்ளும் ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். நீள்வட்ட முக அமைப்புக் கொண்டவர்கள், நெற்றியில் முடி விழுவதுபோல் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ளலாம்,

6. ஹேர்கட்டை விட மிக முக்கியமானது ஹேர்ஸ்டைலை பராமரிப்பது. ஷாம்பூ, கண்டிஷனர் போன்றவற்றை கேசத்திற்கு ஏற்றார் போன்று பயன்படுத்த வேண்டும்.
கூடவே தரமான ஹேர் ஜெல், சொல்யூஷன் போன்றவற்றை கேசத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

7. அடுத்தது மிக முக்கியமானது, ஒவ்வொரு ஹேர்ஸ்டைலுக்கும் ஒரு கால வரையறை உண்டு. அதற்கேற்றாற்போல, மீண்டும் ஹேர்கட் செய்திட வேண்டும். பொதுவாக, குறைந்தது 20 முதல் 35 நாள்களுக்குள் ஹேர்கட் செய்ய வேண்டும்.

இவ்வாறு, முக அமைப்பு மற்றும் கேசத்தின் தன்மைக்கு ஏற்றவாரு ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுத்து, சரியாகப் பராமரிப்பது `ஹேண்ட்ஸம்' லுக்கை நிரந்தரமாகக் கொடுக்கும்.