Published:Updated:

How to series: கண்களுக்குக் கீழுள்ள கருவளையத்தை நீக்குவது எப்படி? | How to get rid of dark circles?

dark circle remedy
News
dark circle remedy

முகத்தில் ஏற்படும் சருமப் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று, கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம். இதனை மிக எளிய முறையில் வீட்டிலேயே சரி செய்துகொள்ளலாம் என்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

Published:Updated:

How to series: கண்களுக்குக் கீழுள்ள கருவளையத்தை நீக்குவது எப்படி? | How to get rid of dark circles?

முகத்தில் ஏற்படும் சருமப் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று, கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம். இதனை மிக எளிய முறையில் வீட்டிலேயே சரி செய்துகொள்ளலாம் என்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

dark circle remedy
News
dark circle remedy

முகத்தில் ஏற்படும் சருமப் பிரச்னைகளில் முக்கியமான ஒன்று, கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம். இரவில் வெகு நேரம் விழித்திருப்பது, மாசு, கணினி, கைபேசியை அதிக நேரம் பார்ப்பது, படிப்பது என பல காரணங்களால் பலருக்கும் இது ஏற்படலாம். முக்கியமாக சரியாகச் சாப்பிடாதவர்களுக்குக் கருவளையங்கள் தோன்றுகின்றன. இதனை மிக எளிய முறையில் வீட்டிலேயே சரி செய்துகொள்ளலாம் என்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. அதற்காக அவர் பகிரும் வழிமுறைகள் இங்கே.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

ஸ்டெப் 1:

- ``முதல் ஸ்டெப்பாக கண்களை சுத்தப்படுத்த வேண்டும். சுத்தமான ரோஸ் வாட்டரை பயன்படுத்தி கண்களுக்கு கீழே, கண்களுக்கு மேலே என சுத்தம் செய்து கொள்ளவும். இதற்கு, இரண்டு கைகளிலும் சிறிதளவு பஞ்சை எடுத்து, அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து எடுத்து, கண்களைச் சுற்றி மேல்நோக்கியவாறு மசாஜ் போல செய்து சுத்தம் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 2:

- பாதம் எண்ணெயை ஒரு roll on பாட்டிலில் எடுத்துக்கொண்டு, கண்களைச் சுற்றி அப்ளை செய்யவும். இதன் மூலம் கண்களுக்கு நல்ல ஓய்வும், கருவளையம் சரி ஆவதற்கான வாய்ப்பும் உண்டாகும். Roll on பாட்டில் இல்லையென்றால், விரல்களால் கண்களைச் சுற்றி மசாஜ் செய்து கொள்ளவும். ரொம்ப மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பாதாம் எண்ணெய் இல்லையெனில் தேங்காய் எண்ணையைக்கூடப் பயன்படுத்தலாம்.

Skin care
Skin care
Representational Image

ஸ்டெப் 3

- மசாஜ் செய்தபின் இரண்டு கண்களிலும் பஞ்சை வைத்து மூடவும். அதன் மேல் வெள்ளரிக்காயை விழுதாக அரைத்து மேலே வைக்கவும், அதன் மேல் இன்னொரு முறை பஞ்சை வைத்து, அதன் மேல் அரைத்த உருளைக்கிழங்கை அப்ளை செய்யவும். தொடர்ந்து அதன் மேல் ரோஸ் வாட்டரை சில சொட்டுகள் விடவும். இதனால் கண்களுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதுடன், கருவளையம் குறையும். கூடவே கண்ணுக்குக் குளிர்ச்சி கிடைத்து, ரிலாக்ஸ்டாக இருக்கும்.

ஸ்டெப் 4

- ஐந்து நிமிடங்கள் அப்படியே இருக்க விடவும். பின் பேக் ஒன்றை அப்ளை செய்ய வேண்டும். அதற்கு காபி டிக்காக்ஷன் மற்றும் கற்றாழை ஜெல் தேவைப்படும். நான்கு ஸ்பூன் ஃபில்டர் காபி தூளை எடுத்து, நல்ல சூடான நீரை அந்த காபி தூள் நனைகின்ற அளவுக்கு மட்டும் சேர்த்து, அதிலிருந்து 3 டீஸ்பூன் டிக்காக்ஷனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்ந்துக் கலந்துகொள்ளவும்.

அதன் பின், கண்களில் ஏற்கனவே வைத்திருந்த வெள்ளரி, உருளைக் கிழங்கு இவற்றை எடுத்துவிட்டு, இந்த பேக்கை பஞ்சில் நனைத்து கண்களின் மீது வைக்கவும். பேக்கை 8 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும். சுத்தமான காட்டன் துணியை வைத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். காபி டிக்காஷனுக்கு பதிலாக டீ டிக்காஷனையும் பயன்படுத்தலாம்.

இந்த முறையை செய்து முடித்த பின் கருவளையம் சிறிது குறைந்திருப்பதை பார்ப்பீர்கள். தொடர்ந்து இதனை செய்துவர முற்றிலுமாக கருவளையத்தை சரி செய்ய முடியும்" என்றார்.