Published:Updated:

How to: தொடர் விக்கலிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of hiccups?

Hiccups (Representational Image)
News
Hiccups (Representational Image) ( Pixabay )

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விக்கல் வருவது எதனால்? அதை எப்படி குணப்படுத்துவது? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா சொல்கிறார்.

Published:Updated:

How to: தொடர் விக்கலிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of hiccups?

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விக்கல் வருவது எதனால்? அதை எப்படி குணப்படுத்துவது? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா சொல்கிறார்.

Hiccups (Representational Image)
News
Hiccups (Representational Image) ( Pixabay )

பொதுவாகவே, சாப்பிடும்போது சில நேரங்களில் விக்கல் ஏற்படும். தண்ணீர் குடித்த பிறகு, அது அடங்கிவிடும். ஆனால், சிலருக்குத் தண்ணீர் குடித்தாலும் விக்கல் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விக்கல் வருவது எதனால்? மற்றும் அதை எப்படி குணப்படுத்துவது? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா சொல்கிறார்.

இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா
இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா

``மார்புப் பகுதியையும் வயிற்றையும் பிரிக்கும் இடத்தை Diaphragm என்று சொல்வோம். அப்பகுதியில் ஏதேனும் உறுத்தல் ஏற்பட்டால் விக்கல் வரும். வயிற்றுப்புண், வயிற்றில் காற்று அடைத்துப் போதல், இரைப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட பல காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது.

உணவை வேகமாகச் சாப்பிடுகிறவர்களுக்கு விக்கல் வருவது இயல்பானதுதான். உணவை வேகமாக உட்கொள்கையில் உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குச் செல்லும்போது விக்கல் ஏற்படலாம்.

இயல்பாக நாளொன்றுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவை விக்கல் வந்தால் பிரச்னை இல்லை. அதுவே தொடர்ச்சியாக வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

உணவு நன்கு செரிமானமாகி இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு சரியான நேரத்தில் சென்றுவிட்டால் விக்கல் வராது. இரைப்பைக்குள் நீண்ட நேரம் உணவு தங்கியிருக்க நேர்ந்தால், Diaphragm-ஐ உறுத்தி விக்கலைத் தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது.

உணவுக்குழாய்க்குள் உணவு செல்லும்போது Diaphragm spasm என்கிற அடைப்பு ஏற்படுவதால் விக்கல் உண்டாகிறது. தண்ணீர் குடித்ததும் அது சரியாகி விக்கல் நின்றுவிடும்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Pixabay

இது இயல்பாக நடப்பது. ஆனால், சிலருக்கு தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்காது. தொடர்ச்சியாக விக்கல் இருந்துகொண்டே இருக்கும். அவர்களுக்கு Diaphragm spasm-ஐ குறைக்கும் மருந்துகள் மற்றும் உணவை முன்னுக்குத்தள்ளும் மருந்துகள் கொடுத்தால் விக்கல் பிரச்னையிலிருந்து விடுபடுவார்கள்.

மிக அரிதாகச் சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத விக்கல் ஏற்படுவதுண்டு. அவர்கள் ஒரு நாள் முழுவதும் கூட தொடர்ச்சியாக விக்கிக்கொண்டே இருப்பார்கள். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்காது. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாக வேண்டும். அவர்களுக்கு எண்டோஸ்கோபி எடுத்து வயிற்றில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ற சிகிச்சை வழங்கப்படும்.

விக்கல் ஏற்படாதவாறு தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் எந்த பரபரப்பும் இல்லாமல் உணவை நிதானமாக மென்று சாப்பிட வேண்டும். `நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு’ என்று பழமொழி கூட இருக்கிறது.

உணவை நன்றாக மென்று, அரைத்து, உமிழ்நீரோடு கலந்து விழுங்கினால் அது சீராக உணவுப்பாதை வழியே இரைப்பையைச் சென்றடையும். அதைத் தொடர்ந்து இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் உணவு மேலும் செரிக்கப்பட்டு சிறுகுடலைச் சென்றடையும். என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல் எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். அவசரமாக அள்ளித் திணிக்காமல் நிதானமாகச் சாப்பிட வேண்டியது முக்கியம்” என்றார்.