Published:Updated:

How to: பேன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of lice?

lice
News
lice

``சிறிது மெனக்கெட்டால் ஒரே வாரத்தில் இந்த பேன் மற்றும் ஈறு பிரச்னைகளை சரிசெய்திடலாம்'' எனக் கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, பேன் நீங்க செய்ய வேண்டியவற்றைக் கூறுகிறார்.

Published:Updated:

How to: பேன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? | How to get rid of lice?

``சிறிது மெனக்கெட்டால் ஒரே வாரத்தில் இந்த பேன் மற்றும் ஈறு பிரச்னைகளை சரிசெய்திடலாம்'' எனக் கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, பேன் நீங்க செய்ய வேண்டியவற்றைக் கூறுகிறார்.

lice
News
lice

பலருக்கும் கேசத்தில் உருவாகக்கூடிய பெரும் பிரச்னை, பேன் மற்றும் ஈர் பிரச்னைதான். முக்கியமாகப் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் இது வகுப்பறையில் கவனச் சிதறல் முதல் சங்கடம் வரை ஏற்படுத்தும். சிலருக்கோ, பேனும் ஈரும் அதிகமாக அதிகமாக, அது அதிக உறுத்தல் இல்லாத நிலைக்கு வந்துவிடும்.

வசுந்தரா
வசுந்தரா

``சிறிது மெனக்கெட்டால் ஒரே வாரத்தில் இந்த பேன் மற்றும் ஈரு பிரச்னைகளை சரிசெய்திடலாம்'' எனக் கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, பேன் நீங்க, நீங்க செய்ய வேண்டியவற்றைக் கூறுகிறார்.

பேன் பிரச்னை நீங்க செய்ய வேண்டியவை:

- இயற்கை முறையில் சரிசெய்ய வேண்டுமென்றால் துளசி மற்றும் வேப்பிலை இரண்டையும் தனித் தனியாகக் காயவைத்து, பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இவற்றை சமமான அளவுகளில், கேசத்துக்கு ஏற்றாற்போல எடுத்துக்கொள்ளவும். அதைக் கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் கலக்கி தலையில் அப்ளை செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து சுத்தமாக அலசிவிடவும்.

- அதன் பின் துண்டில் தலையைத் துவட்டினால், பேன்கள் துண்டோடு வந்துவிடும்.

- துளசியைத் தலையணைக்கு அடியில் வைத்தும் தூங்கலாம். ஆனால், இதில் பலன் கிடைப்பதற்குக் கொஞ்சம் காலம் ஆகும்.

- மருத்துவ முறையில் சரி செய்வதற்கு, மருந்தகத்தில் பேன், ஈர் பிரச்னைகளை சரி செய்வதற்கு என மருந்துகள் கிடைக்கும். லோஷன் வடிவிலும், ஷாம்பூ வடிவிலும் கிடைக்கின்றன. பேன் பிரச்னை குறைவாக இருப்பவர்கள் ஷாம்பூவை பயன்படுத்தலாம்.

- அதிகமாக பேன் இருப்பவர்கள் லோஷனை பயன்படுத்தலாம். பயன்படுத்தும்போது, பஞ்சைக் கொண்டு வேர் பகுதி வரை அதை தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கேசத்தை அலசவும். மொத்த பேன்களும் இறந்துவிடும். சுலபமாக பேன் பிரச்னையை சரி செய்யலாம்.

- ஈறுகளை எடுக்க ஈருகுழிகளைப் பயன்படுத்தலாம். அல்லது ஹேர் அயர்ன் கொண்டு அயர்ன் செய்யும்போது ஈருகள் இறந்துவிடும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- வறண்ட கேசத்தில் சீப்பைக் கொண்டு சீவி பேன்களை எடுக்கக் கூடாது.
- பேனை எடுப்பதாக நினைத்து, அளவுக்கு அதிகமாக அழுத்தி சீவக் கூடாது.