Published:Updated:

How to series: மாதவிடாய்க் கால `Mood swings'-ஐ கையாள்வது எப்படி? | How to get rid of mood swings?

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

ஒவ்வொரு மாதமும் மூடு ஸ்விங்ஸை எதிர்கொள்வதால், பெண்கள் மாதவிடாய் நாள்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து தங்களுக்கு மனமாற்றங்கள் ஏற்படும்போது அதை மூடு ஸ்விங்ஸ் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

Published:Updated:

How to series: மாதவிடாய்க் கால `Mood swings'-ஐ கையாள்வது எப்படி? | How to get rid of mood swings?

ஒவ்வொரு மாதமும் மூடு ஸ்விங்ஸை எதிர்கொள்வதால், பெண்கள் மாதவிடாய் நாள்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து தங்களுக்கு மனமாற்றங்கள் ஏற்படும்போது அதை மூடு ஸ்விங்ஸ் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

Woman (Representational Image)
News
Woman (Representational Image) ( Image by StockSnap from Pixabay )

பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் நாள்கள் என்பது உடலளவில் மட்டுமல்லாது பலருக்கு மனதளவிலும் தடுமாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய நாள்களாகும். மாதவிடாய் நேரங்களில் மூடு ஸ்விங்ஸ் (Mood Swings) ஏற்படும். உடலிலும், மனதிலும் ஒருசேர நிகழும் இந்தப் பிரச்னைகளை எவ்வாறு கையாளலாம் என்று பார்க்கலாம்.

Stressed woman
Stressed woman
Pexels

Mood Swings என்றால்?

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் Mood Swings என்பது மாதவிடாய் நாள்களுக்கு ஒரு வார காலத்திற்கு முன்பிருந்தே தொடங்குகிறது. நன்றாகப் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கோபம், எரிச்சல், சோகம், கவலை எனப் பல்வேறு உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படுவார்கள்.

இதில் இரண்டு வகையான மனநிலை மாற்றங்கள் ஏற்படும். Premenstrual dysphoric disorder (PMDD) மற்றும் Prementural Syndrome. இவை ஏற்படுத்தும் அறிகுறிகளான மனமாற்றங்கள், மாதவிடாய் நாளுக்கு தோராயமாக 7 நாள்கள் முன்பாகத் தொடங்கி, மாதவிடாய் நாள்களின் முதல் சில நாள்களில் முடிவடையும். இவற்றில், Premenstrual dysphoric disorder (PMDD) என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும், பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும்.

அடுத்ததாக, Prementural Syndromeல் பதற்றம், மனநிலையில் முடிவெடுக்க முடியாத அளவிற்கான கோளாறு அல்லது மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

ஏன் ஏற்படுகிறது?

உறுதியான காரணங்கள் குறித்து தெளிவான விளக்கம் எதுவும் தெரியவில்லை என்றாலும் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் இந்த மனமாற்றத்திற்குக் காரணம் ஹார்மோனில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி, பொதுவாக 28 நாள்கள். அந்த சுழற்சியில் அவள் ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். மாதவிடாய் முடிந்த நாளில் இருந்து சிறிது சிறிதாக அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்த ஹார்மோன் லெவல், இரண்டு வாரங்களில் உச்சம் தொட்டிருக்கும். கருமுட்டை வெளியானதுக்கு (ஓவ்யூலேஷன்) பிறகான மூன்றாவது வாரத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் லெவல் வடிய ஆரம்பிக்கும். மேலும், புரொஜெஸ்டிரானின் ஹார்மோனின் லெவலிலும் மாற்றங்கள் ஏற்படும். நான்காவது வாரத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் லெவல் படிப்படியாகச் சரியும். இதுதான், மூடு ஸ்விங்ஸ் ஏற்படும் நாள்கள்.

சுழற்சியின் இறுதி வாரம், 21 & 28 நாள்கள் வரையிலான முன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்கள், பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. அந்நிலைதான் மூடு ஸ்விங்ஸ். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவையும் தோன்றலாம்.

எப்படிக் கையாள்வது?

சோகம், மனநிலையில் திடீர், விவரிக்க முடியாத மாற்றங்கள், அழுகை, மயக்கம், எரிச்சல், மோசமான தூக்கம் அல்லது அதிக தூக்கம், கவனம் செலுத்துவதில் சிக்கல், அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வமின்மை, குறைந்த ஆற்றல் போன்ற பிரச்னைகள் பொதுவாக ஏற்படக் கூடியவை. இவற்றைக் கையாள்வது குறித்து, மருத்துவர் பார்வதி விளக்குகிறார்.

``மூடு ஸ்விங்ஸ் என்பது சாதாரண கோபம், எரிச்சலில் ஆரம்பித்து தற்கொலை வரையிலான எண்ணங்கள் ஏற்படக் கூடிய அளவுக்கு சிலருக்கு வீரியமாக இருக்கும். இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவது என்றாலும், சிகிச்சை தேவைப்படுகிற உச்சபட்ச நிலையில் மட்டுமே இதற்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்க முடியும். மற்றபடி தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை, தினமும் இல்லையென்றாலும் இதுபோன்ற mood swing நாள்களில் மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

உணவில் சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்கள், கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது மூடு ஸ்விங்ஸை கையாள முடியும்.

மருத்துவர் பரிந்துரையின்படி விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், கீரைகள், தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், சிக்கன் உணவு எடுத்துக்கொள்ளலாம்.

தவிர, உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து உணவின்மை, தேவையான நேரம் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை எல்லாம் மூடு ஸ்விங்ஸை அதிகரிக்கலாம் என்பதால், இவற்றை எல்லாம் தவிர்த்து வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மூடு ஸ்விங்ஸை எதிர்கொள்வதால், பெண்கள் மாதவிடாய் நாள்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து தங்களுக்கு மனமாற்றங்கள் ஏற்படும்போது அதை மூடு ஸ்விங்ஸ் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். இதற்குக் காரணம் சுற்றுப்புறமோ, பிரச்னைகளோ அல்ல, நம் உடல்தான் என்று உணர்ந்துகொள்ளலாம். அது, கோபம், எரிச்சல் என்று அதை மற்றவர்களின் மீது செலுத்தாமல் கட்டுப்படுத்த கைக்கொடுக்கும்.''