Published:Updated:

How to series: தழும்புகளை மறைய வைப்பது எப்படி? | How to get rid of stretch marks?

Stretch marks (Representational Image)
News
Stretch marks (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

``கர்ப்பிணிகள் மட்டுமல்ல, வளரிளம் பிள்ளைகளுக்கும் முதுகுப்பகுதி, தோள்பகுதி என இத்தழும்புகள் ஏற்படுவதைப் பார்க்கலாம். மேலும், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கும் இத்தழும்புகள் ஏற்படுகின்றன."

Published:Updated:

How to series: தழும்புகளை மறைய வைப்பது எப்படி? | How to get rid of stretch marks?

``கர்ப்பிணிகள் மட்டுமல்ல, வளரிளம் பிள்ளைகளுக்கும் முதுகுப்பகுதி, தோள்பகுதி என இத்தழும்புகள் ஏற்படுவதைப் பார்க்கலாம். மேலும், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கும் இத்தழும்புகள் ஏற்படுகின்றன."

Stretch marks (Representational Image)
News
Stretch marks (Representational Image) ( Photo by engin akyurt on Unsplash )

பெண்களுக்குக் கர்ப்பகாலத்திலும் மற்றும் பொதுவாக வளரும் பருவத்தில் சிலருக்கு தோல் விரியும்போதும் தழும்புகள் (stretch marks) ஏற்படுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பம் தரித்த பின் வயிறு பெரிதாகும்போது இத்தழும்புகள் அதிக அளவில் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்கான மற்றும் மறையச் செய்வதற்கான வழிகள் பற்றிச் சொல்கிறார் சருமநல மருத்துவர் வானதி திருநாவுக்கரசு.

வானதி திருநாவுக்கரசு
வானதி திருநாவுக்கரசு

``கர்ப்பகாலத்திலும், வளரும் பருவத்திலும் ஏற்படும் இதுபோன்ற தழும்புகள் தவிர்க்கவியலாதவைதான் என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் ஓரளவு இதைத் தவிர்க்க, கட்டுப்படுத்த முடியும். எல்லோருக்கும் ஒரே ரிசல்ட் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.

கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, எடைக் குறைவான குழந்தையைச் சுமக்கிறவர்களுக்கு வயிறு மிகவும் பெருத்து விரிவடையாது. அதுவே எடை அதிகமுள்ள குழந்தையைச் சுமக்கிறவர்களுக்கு வயிறு மிகவும் பெருத்துப்போவதால் தோல் நன்கு விரிவடையும். இதன் விளைவாக வயிற்றுப்பகுதியில் இத்தழும்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பம் தரித்த பிறகு, ஆரம்பக் காலகட்டத்திலேயே, தழும்புகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள சருமநல மருத்துவரை அணுகலாம்.

இத்தழும்புகள் ஏற்படா வண்ணம் தடுப்பதற்காக மாய்ச்சரைஸர் மற்றும் Vitamin C, Glycolic acid ஆகியவை பரிந்துரைக்கப்படும். இவ்வகைத் தழும்புகளில் சிவப்பாக இருக்கும் Striae Rubra வகைத் தழும்பை மறையவைக்க இயலும்.

அதுவே வெள்ளையாக இருக்கும் Striae Albae வகைத் தழும்பை மறையவைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. Platelet Rich Plasma (PRP) மற்றும் ஆல்பா லேசர் போன்ற சிகிச்சைகளின் வழியே இதை ஓரளவு குணப்படுத்த முடியும்.

Stretch marks(Representational Image)
Stretch marks(Representational Image)
Photo by Jan Canty on Unsplash

கர்ப்பிணிகள் மட்டுமல்ல, வளரிளம் பிள்ளைகளுக்கும் முதுகுப்பகுதி, தோள்பகுதி என இத்தழும்புகள் ஏற்படுவதைப் பார்க்கலாம். மேலும், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கும் இத்தழும்புகள் ஏற்படுகின்றன.

இன்றைய சூழலில், சருமப் பிரச்னைகளுக்குத் தவறான மருந்துகளைப் பயன்படுத்தும் Topical steroid abuse அதிக அளவில் நடக்கிறது. அரிப்பு மாதிரியான தோல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்போது சரும நல மருத்துவரை அணுகாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று மக்கள் தாங்களாகவே மருந்து வாங்கி சருமத்தில் அப்ளை செய்வது மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடியது.

இதுபோன்ற பயன்பாட்டால் தோல் முற்றிலும் சிதைந்துபோன நிலையில் சிகிச்சைக்கு வருகிறவர்களைப் பார்க்கிறோம். எந்தப் பிரச்னைக்கு எந்த விதமான மருந்தைக் கொடுக்க வேண்டும், அதை எந்த அளவு கொடுக்க வேண்டும், மேலும் எவ்வளவு காலம் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதலின்படி சிகிச்சை மேற்கொண்டால் இப்பிரச்னைகள் ஏற்படாது.

எனவே, தோல் விரிவடைவதால் ஏற்படும் தழும்புகளைத் தவிர்க்க முடிந்தவரை முன் ஏற்பாட்டுடன் செயல்பட வேண்டும். மருத்துவ ஆலோசனையின்றி எந்தச் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

- ஜிப்ஸி