Published:Updated:

How to series: முக சுருக்கங்களை வீட்டிலேயே நீக்குவது எப்படி? | How to get rid of wrinkles at home?

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

``முகத்தில் வாயின் ஓரங்களில், நெற்றியில், கண்களின் ஓரங்களில் எனப் பல பகுதிகளில் கோடு போன்ற சுருக்கங்கள் அதிகமாகத் தோன்றும். வீட்டிலேயே சில எளிய பொருள்களின் மூலம் இவற்றை சரிசெய்யலாம்.''

Published:Updated:

How to series: முக சுருக்கங்களை வீட்டிலேயே நீக்குவது எப்படி? | How to get rid of wrinkles at home?

``முகத்தில் வாயின் ஓரங்களில், நெற்றியில், கண்களின் ஓரங்களில் எனப் பல பகுதிகளில் கோடு போன்ற சுருக்கங்கள் அதிகமாகத் தோன்றும். வீட்டிலேயே சில எளிய பொருள்களின் மூலம் இவற்றை சரிசெய்யலாம்.''

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

வாழ்க்கை முறை மாற்றங்கள், மாசு, சரியான சருமப் பராமரிப்பின்மை போன்ற காரணங்களினால் பல சருமப் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக முகம் கறுப்படைதல், சுருங்குதல், பொலிவின்மையுடன், முகத்தில் கோடுகள்போல சுருக்கங்கள் ஏற்படுதல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படி முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை, கோடுகளை வீட்டிலேயே எப்படி நீக்குவது என்பது குறித்து ஆலோசனை தருகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

``முகத்தில் வாயின் ஓரங்களில், நெற்றியில், கண்களின் ஓரங்களில் எனப் பல இடங்களில் கோடு போன்ற சுருக்கங்கள் தோன்றும். வீட்டிலேயே சில எளிய பொருள்களின் மூலம் இவற்றை சரிசெய்யலாம்.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

தேவையான பொருள்கள்:

*கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்

* சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன்

இவை இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் அப்ளை செய்து கொள்ளவும். இதனை ஒரு மணி நேரம் வரை அப்படியே விடவும். பின்னர் கழுவி, தொட்டுப் பார்த்தால் சருமம் இறுகியிருக்கும். சுருக்கங்கள் மறையும். முகத்திற்குப் பொலிவையும் தரும்.

* இயற்கையாக அல்லாமல் ரெடிமேடு பொருள்கள் வேண்டும் என நினைத்தால், ஹயாலுரானிக் ஆசிட் (Hyaluronic acid) சீரம் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கக் கைக்கொடுக்கும். லோஷனாகவும் கிடைக்கும்.

இதனை வாங்கி இரவு நேரத்தில் கைகளில், முகத்தில், கழுத்தில் அப்படியே அப்ளை செய்து கொள்ளலாம்.

* கொலாஜன் ஷீட்டை (Collagen sheet) பயன்படுத்தியும் முகத்தில் தோன்றிய சுருக்கங்களையும் , கோடுகளையும் நீக்கலாம். கொலஜன் ஷீட்டை சிறிய அளவில் வெட்டி எடுத்து, சருமத்தின் மீது வைக்க வேண்டும்.

அதன் மேல், ஏற்கெனவே கூறிய கற்றாழை, சாத்துக்குடி ஜூஸ் கலந்த கலவையை அப்ளை செய்தால், சருமம் அப்படியே உள்ளிழுத்துக்கொள்ளும். இதனால் சருமம் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்'' என்றார்.