Published:Updated:

How to: வீட்டிலேயே முட்டை ஷாம்பூ செய்வது எப்படி? | How to make egg shampoo at home?

Egg shampoo (representational image)
News
Egg shampoo (representational image) ( Photo by Cup of Couple from Pexels )

முட்டையைக் கொண்டு இரண்டு முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம். முட்டை ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என்று ஒவ்வொரு வழிமுறையாகப் பார்க்கலாம்.

Published:Updated:

How to: வீட்டிலேயே முட்டை ஷாம்பூ செய்வது எப்படி? | How to make egg shampoo at home?

முட்டையைக் கொண்டு இரண்டு முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம். முட்டை ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என்று ஒவ்வொரு வழிமுறையாகப் பார்க்கலாம்.

Egg shampoo (representational image)
News
Egg shampoo (representational image) ( Photo by Cup of Couple from Pexels )

சத்துகள் அதிகம் உள்ள முட்டை உடலின் உள்ளே மட்டுமல்ல, உடலுக்கு வெளியேவும் பல நன்மைகளை செய்கிறது. முகத்திற்கு பொலிவு தருவதில் இருந்து கேசத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் வரை அளிக்கிறது. குறிப்பாக, அதிகம் உலர்ந்து, வறண்டு, வலிமையிழந்து போன கேசத்தை மிருதுவாகவும், வலிமையுடையதாக மாற்றவும் முட்டை உதவும். கேச ஆரோக்கியத்துக்குக் கைகொடுக்கும் முட்டையைக் கொண்டு வீட்டிலேயே எப்படி ஷாம்பூ தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

முட்டை
முட்டை
எம். விஜயகுமார்

முட்டையைக் கொண்டு இரண்டு முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம். முட்டை ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என்று ஒவ்வொரு வழிமுறையாகப் பார்க்கலாம்.

முட்டை ஷாம்பூ 1

தேவையான பொருள்கள்:
- 1 முட்டை
- 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 டேபிள் ஸ்பூன் மைல்டு/ஹெர்பல்/பேபி ஷாம்பூ (நறுமணமற்றது பரிந்துரைக்கத்தக்கது)
- 1/2 கப் தண்ணீர்

செய்முறை:

மேலே கூறப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கலந்து வைத்துள்ள இந்தக் கலவையை தலைக்கு ஷாம்பூவாகப் பயன்படுத்தவும்.

வறண்ட மற்றும் சேதமடைந்த கேசம் உள்ளவர்களுக்கு இந்த ஷாம்பூ சிறந்தது. குறிப்பாக சூரிய ஒளி அதிகமாகத் தலையில் படுவதன் காரணமாக தலைமுடி சேதம் ஏற்பட்டவர்களுக்கு, இந்த ஷாம்பூ எளிமையான தீர்வாக அமையும்.

தலைமுடி மிகவும் நீளமாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் கூடுதலாகச் சேர்க்கவும். ஷாம்பூ எஞ்சியிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 36 மணி நேரத்திற்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முட்டை ஷாம்பூ 2

தேவையான பொருள்கள்:

- முட்டை - 1

- மைல்டு ஷாம்பூ/பேபி ஷாம்பூ - மூன்று டீஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை மென்மையாகக் கலக்கவும். அடுத்து, பேபி ஷாம்பூவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஷாம்பூவின் பாதியை உச்சந்தலையிலும் முடியிலும் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.

representational image
representational image
pixabay

நன்றாக மசாஜ் செய்தபின் ஷாம்பூவை முழுவதுமாக அலசவும். பின்னர் ஷாம்பூவின் மீதியை எடுத்து அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். இரண்டாவது முறை ஷாம்பூவை எடுத்து மசாஜ் செய்யும் போது 60 வினாடிகளுக்கு மேல் செய்ய வேண்டாம். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும். பின்னர் நார்மலான தண்ணீரில் அலசவும்.
(முட்டை ஷாம்பூ பயன்படுத்தும்போது வெந்நீரில் குளித்தால் அதிக வாடை வரலாம் என்பதால், மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்திய பின், நார்மலான தண்ணீர் கொண்டு தலையை அலசவும்.).

இந்த ஷாம்பூவை பயன்படுத்தும்போது பெரிதளவில் நுரை இருக்காது ஆனால், கேசத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.

குறிப்பு: முட்டை வாடை விரும்பாதவர்கள், ஷாம்பூவுடன் வெனிலா, லேவண்டர் என ஏதாவது ஒரு எசன்ஷியல் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம்.