Published:Updated:

How to series: வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி? | How to make Rose water at home?

Rose water making
News
Rose water making

வீட்டில் நாம் தயாரிக்கும் பேக், ஸ்கிரப் என எதுவாக இருந்தாலும் அதில் பெரும்பாலும் ரோஸ் வாட்டரை பயன்படுத்திவிடுவோம். ரோஸ் வாட்டரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Published:Updated:

How to series: வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி? | How to make Rose water at home?

வீட்டில் நாம் தயாரிக்கும் பேக், ஸ்கிரப் என எதுவாக இருந்தாலும் அதில் பெரும்பாலும் ரோஸ் வாட்டரை பயன்படுத்திவிடுவோம். ரோஸ் வாட்டரை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Rose water making
News
Rose water making

சருமப் பராமரிப்புக்கு வீட்டிலேயே நாம் செய்துகொள்ளும் வழிமுறைகளில் பேக், ஸ்கிரப் உடன் பெரும்பாலும் ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்துவோம். மேலும், குளித்தவுடன் முகத்தில் ஸ்பிரே செய்துகொள்வது, முகத்தை துடைப்பது, கண் எரிச்சல் என ரோஸ் வாட்டரை பயன்படுத்துவோம். அரோமோ தெரபியில் கூட, ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும், ரோஸின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே இருந்தால் ஹார்மோன் இயக்கத்துக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது.

இந்தளவுக்கு நம் தினசரியில் நாம் பயன்படுத்தும் ரோஸ் வாட்டரை கடையில் வாங்காமல், வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்க வழிகாட்டுகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

ரோஸ்வாட்டர் தயாரிக்கத் தேவையான பொருள்கள்

பிங்க் ரோஸ் - ஒரு பவுல்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

``அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கல் அல்லது டைல்ஸை உள்ளே வைக்கவும். இப்படி வைக்கும்போது அப்பாத்திரம் ஆடாமல் அப்படியே இருக்கும். கூடவே ரோஸ் மேலே இருக்கும் என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும்.
அதன்பின் அந்தக் கல்லைச் சுற்றி ரோஜா இதழ்களைப் பரப்ப வேண்டும். பின் அந்தப் பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.

பின்னர், நடுவில் சிறிய பாத்திரத்தை வைத்து, கண்ணாடி மூடி கொண்டு மூடி விட வேண்டும். கண்ணாடி மூடியில் இருக்கும் ஓட்டையை சோளமாவு, அல்லது கோதுமை மாவு கொண்டு அடைத்துவிட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சூடு வரவர ரோஜா இதழ்களில் இருந்து நீரும், எண்ணெய்யும் சேர்ந்து நீராவியாகி நடுவில் இருக்கும் அந்த பாத்திரத்தில் சேரும். பொதுவாக பலரும், ரோஜா இதழ்களோடு தண்ணீர் கலந்து கொதிக்க வைப்பதுதான் ரோஸ்வாட்டர் என நினைப்பார்கள். ஆனால் அது வெறும் ரோஸ் டானிக் மட்டும்தான்.

ரோஸ் வாட்டர் என்பது எண்ணெய்யுயுடன் கூடிய தண்ணீர் ரோஜா இதழ்களில் இருந்து வெளியே வருவதுதான். சில நிமிடங்களில் நாம் உள்ளே வைத்திருக்கும் பாத்திரத்தில் அந்த நீராவியாக சேர ஆரம்பிக்கும். இன்னும் கொஞ்சம் நிறைய வேண்டும் என்பதால் கண்ணாடி மூடியின் மேல் நாம் ஐஸ்கட்டிகளை வைக்கலாம். அப்போது நீராவி வீணாகாமல் நாம் உள்ளே வைத்திருக்கும் பாத்திரத்தில் நீராக சேரும். சிறிது நேரத்தில் ரோஜா இதழ்களின் நிறம் வெளிறிப் போயிருக்கும். அப்போது நாம் மூடியை திறந்து, உள்ளிருக்கும் பாத்திரத்தை எடுத்துவிடலாம்.

அந்தச் சிறிய பாத்திரத்தில் இருக்கும் நீர்தான் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர். இதை நாம் எடுத்து வைத்துக்கொண்டால் எத்தனை மாதமானாலும் கெடாது. மேலும் ரோஜா இதழ்களில் நாம் ஊற்றிய நீரை எடுத்தும் பயன்படுத்தலாம். இதை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். நல்ல வாசனைக்கு, ரோஸ் ஆயில் ஒரு சொட்டு விட்டுக் கொண்டால் இன்னும் வாசனையாக இருக்கும்.

நீராவி மூலம் நாம் எடுத்த சுத்தமான ரோஸ் வாட்டரை கண்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரோஜா இதழ்களில் இருந்து எடுத்த வாட்டரை உடலுக்கும், முகத்திற்கும் என அனைத்து சருமப் பராமரிப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.