Published:Updated:

How to series: வீட்டிலேயே வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி? | How to make serum at home?

hair serum
News
hair serum

சருமம் மற்றும் கேசப் பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கேசத்தை பொறுத்தமட்டில் பொடுகு, முடி உதிர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த வைட்டமின் சி சீரமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

Published:Updated:

How to series: வீட்டிலேயே வைட்டமின் சி சீரம் தயாரிப்பது எப்படி? | How to make serum at home?

சருமம் மற்றும் கேசப் பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கேசத்தை பொறுத்தமட்டில் பொடுகு, முடி உதிர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த வைட்டமின் சி சீரமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

hair serum
News
hair serum

சருமம் மற்றும் கேசப் பராமரிப்பில் வைட்டமின் சி சீரம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கேசத்தை பொறுத்தமட்டில் பொடுகு, முடி உதிர்வு தொடர்பான பிரச்னைகளுக்கு வைட்டமின் சி சீரம் தீர்வு தருகிறது. கூடவே, கேசம் அடங்காமல் இருக்கும் ஃபிரிஸ்ஸி ஹேர் (Frizzy Hair)-ஐ மென்மையாக்கவும் இந்த சீரத்தை பயன்படுத்தலாம். அழகு சார்ந்த பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும் இந்த வைட்டமின் சி சீரமை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

தேவையான பொருள்கள்:

- கற்றாழை ஜெல்
- ரோஸ் வாட்டர்
- பாதாம் எண்ணெய்
- வைட்டமின் ஈ எண்ணெய்
- டீ ட்ரீ எண்ணெய்
- லாவண்டர் எண்ணெய்

செய்முறை:

``ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். சுத்தமான, செயற்கைப் பொருள்கள் எதுவும் சேர்க்கப்படாத, முடிந்த அளவு வீட்டிலேயே தயாரித்த ரோஸ் வாட்டர் 50 மில்லியுடன், அரை டீஸ்பூன் சுத்தமான பாதாம் எண்ணையை சேர்த்துக் கொள்ளவும். 1/4 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணையை இத்துடன் சேர்க்கவும். கூடவே டீ ட்ரீ எண்ணெய், லாவண்டர் எண்ணைய் (வாசனைக்காகச் சேர்க்கப்படும் இந்த எண்ணெயை தேவை என்றால் சேர்த்துக்கொள்ளலாம்) சில துளிகள் சேர்க்கவும். இதனை நன்றாகக் கலந்து கொள்ளவும்; அல்லது மிக்ஸியில் அடித்துக் கொள்ளலாம். கலந்து/அடித்து எடுத்தால் வைட்டமின் சி சீரம் தயாராகிவிடும்.

பயன்படுத்தும் முறை:

தயாரித்த சீரமை ஸ்பிரே பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பயன்படுத்தும்போது, சீரமை கேசத்தில் ஸ்பிரே செய்யலாம். அல்லது கைகளில் சிறிதளவு எடுத்துப் பயன்படுத்தலாம். கேசத்தின் நடுப்பகுதில் இருந்து கீழ்நோக்கி நுனிவரை ஸ்பிரே செய்து/தடவி, சிறிது நேரம் வைத்திருக்கவும் (ஸ்கால்ப்பில் பயன்படுத்த வேண்டியதில்லை). பின் சீரம் உலர்ந்த பின் நன்றாக சீவி விட்டால், கேசம் செட் ஆகிவிடும். முடி பளபளப்பாகவும், அழகாகவும் மாறிவிடும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

யாரெல்லாம் கேசத்துக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கிறார்களோ அவர்கள் இதனை பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 15 - 30 நாள்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம், வெளியில் இருந்தால் ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்'' என்றார்.