Published:Updated:

How to: வீட்டிலேயே ABC ஜூஸ் தயாரிப்பது எப்படி? | How to prepare ABC juice at home?

Juice (Representational Image)
News
Juice (Representational Image) ( Pixabay )

உடலுக்குத் தேவையான பெரும்பான்மையான சத்துகளைக் கொண்டுள்ள இந்த ஜூஸ், ரொம்பவே எளிதாகத் தயாரிக்கக்கூடியது ஆகும். இந்த ஜூஸை காலை உணவுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம், காலை உணவின் மூலமாகக் கிடைக்கக்கூடிய அத்தனை சத்துகளும் இந்த ஜூஸில் உள்ளது.

Published:Updated:

How to: வீட்டிலேயே ABC ஜூஸ் தயாரிப்பது எப்படி? | How to prepare ABC juice at home?

உடலுக்குத் தேவையான பெரும்பான்மையான சத்துகளைக் கொண்டுள்ள இந்த ஜூஸ், ரொம்பவே எளிதாகத் தயாரிக்கக்கூடியது ஆகும். இந்த ஜூஸை காலை உணவுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம், காலை உணவின் மூலமாகக் கிடைக்கக்கூடிய அத்தனை சத்துகளும் இந்த ஜூஸில் உள்ளது.

Juice (Representational Image)
News
Juice (Representational Image) ( Pixabay )

ABC ஜூஸ் என்று கூறப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றும் கலந்த ஜூஸ் இன்று பலராலும் விரும்பிக் குடிக்கப்படும் ஜூஸாக மாறியுள்ளது. எடை குறைப்பில் ஆரம்பித்து, முகப் பொலிவு, இதய நோய், புற்றுநோய் எனப் பலவற்றுக்கும் மிகச் சிறந்த பலனை அளிக்கக்கூடிய ஜூஸ் என மருத்துவ உலகிலும் கொண்டாட்டப்பட்டு வருகிறது இந்த ஜூஸ்.

பல சத்துகளைக் கொண்டுள்ள இந்த ஜூஸ், ரொம்பவே எளிதாக தயாரிக்கக் கூடியது. இதை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்; காலை உணவில் கிடைக்கக் கூடிய அத்தனை சத்துகளும் இதில் உள்ளன.

Apple
Apple
pixabay

அல்லது, காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில், அதாவது காலை உணவு முடித்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்தும் எடுத்துக்கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ABC ஜூஸின் நன்மைகள், அவற்றின் எளிய தயாரிப்பு முறை என ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ABC ஜூஸ் தயாரிப்பு முறை:

தேவையான பொருள்கள்:

ஆப்பிள் - 1
பீட்ரூட் - 1(சிறியது)
கேரட் - 2(மீடியம் சைஸ்)

செய்முறை:

மேலே கூறியுள்ள இரண்டு காய் மற்றும் ஒரு பழத்தை நன்றாகக் கழுவி தோல் நீக்கவும். அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து ஜூஸ் ஆக்கி எடுத்துக்கொள்ளவும். இதனை அப்படியே பருகலாம்; விரும்பினால் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம். வடிகட்ட வேண்டிய தேவை இல்லை. அவ்வளவுதான் ABC ஜூஸின் செய்முறை. இவ்வளவு எளிய முறையில் ஜூஸ் செய்தாலும் இதன் நன்மைகள் மிக அதிகம்.

Beetroot
Beetroot
Pixabay

ABC ஜூஸின் நன்மைகள்:

முகம்
- தொடர்ந்து ABC ஜூஸ் குடித்து வரும்போது முகப்பொலிவு அதிகரிக்கும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென இருக்கும். திருமணம் ஆகவிருக்கும் பெண்களின் டயட்டில் இந்த ஜூஸ் மறக்காமல் இடம்பிடித்துவிடும்.

- முக சுருக்கங்களும் சிறுது சிறிதாகக் குறையத் தொடங்கும்.

- முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், கருவளையம், பரு போன்ற பிரச்னைகளை நீங்கும்.

உடல்:

- உடலுக்கு மிக முக்கியத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் இதில் அதிகமாக உள்ளன. வைட்டமின்களில் A , B1, B2, B3, B6, B9, C,E, K, Iron, துத்தநாகம், மக்னீஷியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற பல சத்துகள் இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.
- நோய் வராமல் தடுப்பதிலும், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
- நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு தினமும் பருகப் பரிந்துரைக்கப்படுகிறது.

- செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றில் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் அருமருந்து.

Carrots
Carrots

- அலர்ஜி பிரச்னைகள் உள்ளவர்கள், வாயுக் கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் ஒரு பகுதியைச் சேர்த்து வரலாம்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குவதால் இதனை டயட்டில் இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
- பார்வை, மூளை செயல்பாடு போன்றவற்றுக்கு இந்த ஜூஸ் நன்மை தரக்கூடியது. நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கும்.

இப்படி ABC ஜூஸின் நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளதால் தினமும் இந்த ஜூஸை எடுத்து வரலாம்.