Published:Updated:

How to: கோடைக்காலத்தில் சளிப்பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? | How to prevent summer colds?

Cold - Representational Image
News
Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

மழைக்காலத்தில் மட்டுமல்ல, வெயில் காலத்திலும் சளிப் பிரச்னை பலரையும் வாட்டுவதாக இருக்கும். வெயிலின் அவஸ்தையுடன் சளியும் சேர்ந்துகொண்டு, அதற்குத் துணையாகத் தும்மல், இருமல், தலைவலி போன்ற பிரச்னைகளையும் அழைத்துவரும்போது படுத்தி எடுத்துவிடும்.

Published:Updated:

How to: கோடைக்காலத்தில் சளிப்பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? | How to prevent summer colds?

மழைக்காலத்தில் மட்டுமல்ல, வெயில் காலத்திலும் சளிப் பிரச்னை பலரையும் வாட்டுவதாக இருக்கும். வெயிலின் அவஸ்தையுடன் சளியும் சேர்ந்துகொண்டு, அதற்குத் துணையாகத் தும்மல், இருமல், தலைவலி போன்ற பிரச்னைகளையும் அழைத்துவரும்போது படுத்தி எடுத்துவிடும்.

Cold - Representational Image
News
Cold - Representational Image ( Image by Joseph Mucira from Pixabay )

மழைக்காலத்தில் மட்டுமல்ல, வெயில் காலத்திலும் சளிப் பிரச்னை பலரையும் வாட்டுவதாக இருக்கும். ஏற்கெனவே வெயிலின் சூட்டைத் தாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு, அந்த அவஸ்தையுடன் சளியும் சேர்ந்துகொண்டு, அதற்குத் துணையாக தும்மல், இருமல், தலைவலி போன்ற பிரச்னைகளையும் அழைத்துவரும்போது படுத்தி எடுத்துவிடும். கோடைக்காலத்தில் சளிப்பிடிக்க என்ன காரணம், சளிப்பிடிக்காமல் தவிர்ப்பது எப்படி..? விளக்குகிறார், திருவாரூரை சேர்ந்த உதவி மருத்துவ அலுவலர், மருத்துவர் ராகவி ரவிச்சந்திரன்.

டாக்டர் ராகவி
டாக்டர் ராகவி

``கோடைக்காலத்தில் வெயிலால் ஏற்படக்கூடிய வியர்வைதான் சளிப்பிடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கும். இதைத் தவிர்ப்பதற்கு சில விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது, வெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையுடன் இருக்கும்போதே குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* வியர்வை அதிகம் இருக்கும் நேரங்களில் ஏ.சி பயன்படுத்துவது, மற்றும் குளிர்ந்த நீரை பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* அதிக வியர்வைக்கு உள்ளாகும்போது அதே ஆடையுடன் அப்படியே இருக்காமல், ஆடை மாற்றிக்கொள்வது நல்லது. அது வியர்வை ஈரம், தொற்று இரண்டிலிருந்தும் பாதுகாக்கும்.

* ஆடைகள், உள்ளாடைகளை காட்டனில் அணிவது வியர்வையை உறிஞ்சுக்கொள்ளவும், காற்றோட்டத்துக்கும் கைகொடுக்கும்.

* வெளியில் சென்று வீட்டுக்குள் நுழைந்தவுடன், ஏதேனும் வேலைகள் செய்த பின் மற்றும் சாப்பிடுவதற்கு முன் மறக்காமல் கைகளைக் கழுவ வேண்டும். இது சளித்தொந்தரவு ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும்.

cold and fever
cold and fever

* கோடைக்காலத்தில் அதிகமாக நீர்ச்சத்து குறையும் என்பதால் தண்ணீர் அதிக அளவு பருக வேண்டும். நீர்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மோர் எடுத்துக் கொள்ளலாம். கூடவே காரம் அதிகமுள்ள, மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. பலரும், ஃபிரிட்ஜில் வைத்த நீரைப் பருகுவதை கோடையில் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இதனால் சளிப்பிடிக்க வாய்ப்புள்ளதால் அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் குளிந்த நீர் உடலின் வெப்பத்தை அதிகரித்து காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது, கோடைக்கால சளித்தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பு தரும். மேலும், சளித்தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பதும் முக்கியம்.

* மழைக்காலமோ, கோடையோ... பொதுவாக சளித்தொந்தரவு ஒரு வாரம் வரை நீடிக்கலாம். குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு அதிக நாள்கள் நீடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆவி பிடிப்பது சளித்தொந்தரவை குணமாக்க நேரடியாக உதவாது என்றாலும், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளிலிருந்து விடுபட உதவும்.

இவற்றையெல்லாம் பின்பற்றினால் கோடையில் ஏற்படும் சளித்தொந்தரவை தடுக்கலாம். நீண்ட நாள்களுக்கு சளித்தொந்தரவு இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்" என்றார்.