Published:Updated:

How To: பால்வினை தொற்றை தவிர்ப்பது எப்படி? |How To Protect From Sexually Transmitted Diseases?

ஆணுறை | பால்வினை நோய்
News
ஆணுறை | பால்வினை நோய் ( pixabay )

``ஆண் – பெண் இருவருமே தங்களது பிறப்புறப்பை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியம். பிறப்புறுப்புத் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்படவில்லை என்றே சொல்லலாம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பிறப்புறப்பில் தொற்று எளிதாக ஏற்படும்.''

Published:Updated:

How To: பால்வினை தொற்றை தவிர்ப்பது எப்படி? |How To Protect From Sexually Transmitted Diseases?

``ஆண் – பெண் இருவருமே தங்களது பிறப்புறப்பை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியம். பிறப்புறுப்புத் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்படவில்லை என்றே சொல்லலாம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பிறப்புறப்பில் தொற்று எளிதாக ஏற்படும்.''

ஆணுறை | பால்வினை நோய்
News
ஆணுறை | பால்வினை நோய் ( pixabay )

பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதின் விளைவால் HIV உள்ளிட்ட பால்வினைத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த Sexually Transmitted Disease-ல் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் கவிதா கௌதம்…

கவிதா கௌதம்
கவிதா கௌதம்

``பாதுகாப்பற்ற உடலுறவுதான் பால்வினைத் தொற்று ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு, திருமணமாகாதவர்கள் கூட பாலுறவில் ஈடுபடுகின்றனர்.

மருத்துவ ரீதியில் இது சரி, தவறு என்று சொல்ல ஏதுமில்லை. பாலுறவு என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆணுறையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உறவு கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிறுத்தினால் போதுமானது. பாதுகாப்பான உடலுறவுக்கு காண்டம் மட்டும்தான் நமக்கிருக்கும் உபகரணம். காண்டம் ஆண் – பெண் இருவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

தன் இணையரைத் தவிர்த்து பிறருடன் உறவு கொள்ளாதவர்கள், சுகாதாரத்தைப் பேணாமல் இருந்தால் பால்வினைத் தொற்றுக்கு ஆட்படும் வாய்ப்பிருக்கிறது. ஆண் – பெண் இருவருமே தங்களது பிறப்புறப்பை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியம். பிறப்புறுப்புத் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்படவில்லை என்றே சொல்லலாம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பிறப்புறப்பில் தொற்று எளிதாக ஏற்படும் என்பதால் அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்தக்கூடாது. கழிவறை சென்ற பிறகு பிறப்புறப்பை நன்கு கழுவ வேண்டும். ஒரே பேன்டீஸை அணியாமல் ஒருநாளைக்கு இரண்டு முறை பேன்டீஸ் மாற்ற வேண்டும்.

பேண்டீஸ்
பேண்டீஸ்

பெண்ணின் பிறப்புறுப்பில் லாக்டோ பேசிலஸ் போன்ற சில நன்மை செய்யும் கிருமிகளும் இருக்கும். அவை பிறப்புறுப்பில் தொற்று ஏற்படாதபடி காக்கும். சோப் போட்டுக் கழுவுவதன் மூலம் நன்மை செய்யும் லாக்டோ பேசிலஸ் கிருமிகளும் அழிந்து விடும் என்பதால் Vaginal wash பயன்படுத்தலாம்.

பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் தங்களது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களிடையே பிறப்புறுப்புத் தூய்மை குறித்த விழிப்புணர்வு அறவே இருப்பதில்லை. அவர்களது பிறப்புறப்பின் முன் தோலுக்குள் அழுக்குப் படிந்திருக்கும். தோலை பின்னுக்குத்தள்ளி அதனை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமாக வைத்திருப்பது, ஆணுறை பயன்படுத்தி உறவு கொள்வதன் மூலம் பால்வினைத் தொற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்” என்கிறார் கவிதா கௌதம்.