Published:Updated:

How to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat?

Swimming
News
Swimming

குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் வெந்நீர், சூடான நீரில் குளிப்பதை தவிர்ப்பதன் மூலம், உடல் சூடு மேலும் அதிகமாவதைத் தடுக்கலாம்.

Published:Updated:

How to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat?

குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் வெந்நீர், சூடான நீரில் குளிப்பதை தவிர்ப்பதன் மூலம், உடல் சூடு மேலும் அதிகமாவதைத் தடுக்கலாம்.

Swimming
News
Swimming

உணவுப் பொருள்கள் சூடாக இருக்க வேண்டும் என்பது பலரின் தேர்வு. ஆனால், உடல் சூடு அனைவருமே குறைக்க வேண்டியது. உடல் சூடு ஏற்படுத்தும் அசௌகர்யங்களும் பிரச்னைகளும் பல. பல உடல் உபாதைகளுக்கு நேரடி காரணமாகவும் இது இருக்கிறது. உடல் சூட்டை குறைப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

பொதுவாக, உடலில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கு எடுக்கும் மருந்துகள், வாழ்க்கை முறையில் சரியான அக்கறைமின்மை, மெனோபாஸ், வசிக்கும் சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உடல் சூட்டை அதிகப்படுத்தலாம்.

oil bathing
oil bathing

உடல் சூட்டை தவிர்ப்பதற்கான வழிகள்! 

* உடல் சூடு இருப்பவர்கள் முதலில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறைவதுடன், இன்னும் பல பிரச்னைகளும் குறையும்.

* அடிக்கடி காற்றாட வெளியே செல்லுங்கள். வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகம் உள்ளேயே, புழுக்கத்திலேயே இருக்காதீர்கள். அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு இயற்கையான குளிர்ந்த காற்றை உடலுக்குக் கொடுங்கள்.

குளிர்ந்த நீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் குளியுங்கள். உடல் சூடு இருப்பவர்கள் வெந்நீர், சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கும்போது, வெளிப்புறமாக உடல் சூடு அதிகமாவதைத் தடுக்கலாம்.

* குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டி கொண்டு உடலின் முக்கியமான புள்ளிகளான மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சுப் பகுதி போன்ற வற்றில் ஒற்றி எடுங்கள். இவை உடலின் உள்ளே மிக விரைவாக குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

* இயல்புக்கு அதிகமாக வெப்பமாக உள்ள இடத்தில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதை, உடலுக்கு அதிகமான வேலைகளைக் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். முடிந்தவரை காற்றோட்டமான இடத்தில் இவற்றையெல்லாம் செய்யும்போது உடல் வெப்பம் அதிகமாகாமல் இருக்கும்.

* சில வகை துணிகள், வெப்பம் மிக எளிதாக உடலுக்குள் செல்ல இடம் அளிக்கக்கூடியது. குறிப்பாக, அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற செயற்கை துணிகளைத் தவிர்க்கவும். மாறாக, பருத்தி மற்றும் கைத்தறி துணிகள் உடலில் இருந்து வெப்பத்தை எளிதாக வெளியேற்ற அனுமதிக்கும். அதனால் காட்டன் மற்றும் கதர் உடைகள் போன்றவற்றை அணியலாம்.

Bath
Bath
Jeff McIntosh/The Canadian Press via AP

* எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டை குறைக்க மிக நல்ல வழி. உடலில் ஏதாவது பிரச்னை உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். சில உடல் பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உடல் சூடு பிரச்னை உள்ளவர்கள், கண் வலி, கண் எரிச்சல், தலைவலி, வெள்ளைப்படுதல் போன்ற பிற பிரச்னைகளையும் கொண்டிருந்தால், அது சிகிச்சை தேவைப்படும் நிலை. எனவே, காரணத்தை அறிய தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்.