Published:Updated:

How to: முகத்தில் சேர்ந்த கொழுப்பைக் கரைப்பது எப்படி? | How to reduce face fat?

Representational Image
News
Representational Image ( Photo by Mohammad Hoseini Rad on Unsplash )

உடலில் கை, வயிறு, தொடைப்பகுதி எனச் சேர்ந்திருக்கும் கொழுப்பை போல, சிலருக்கு கன்னம், தாடை என முகத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கவலை தருவதாக இருக்கும். அதைக் குறைப்பதற்கான எளிய வழிகள் இங்கே.

Published:Updated:

How to: முகத்தில் சேர்ந்த கொழுப்பைக் கரைப்பது எப்படி? | How to reduce face fat?

உடலில் கை, வயிறு, தொடைப்பகுதி எனச் சேர்ந்திருக்கும் கொழுப்பை போல, சிலருக்கு கன்னம், தாடை என முகத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கவலை தருவதாக இருக்கும். அதைக் குறைப்பதற்கான எளிய வழிகள் இங்கே.

Representational Image
News
Representational Image ( Photo by Mohammad Hoseini Rad on Unsplash )

உடலில் கை, வயிறு, தொடைப்பகுதி எனச் சேர்ந்திருக்கும் கொழுப்பை போல, சிலருக்கு கன்னம், தாடை என முகத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கவலை தருவதாக இருக்கும். அதைக் குறைப்பதற்கான எளிய வழிகள் இங்கே...

1. டயட்:

உடல் எடையில் இருந்து, முகத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பு வரை எதனைக் குறைப்பதாக இருந்தாலும் நீங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டியது, உணவு முறை மாற்றம். சரிவிகித உணவு அவசியம். முக்கியமாக கார்போஹைடிரேட் உணவுகளைக் குறைத்து புரொட்டீன், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை, உப்பு, எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு `நோ' சொல்ல வேண்டும்.

Water
Water
Pixabay

2. தண்ணீர்:

நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். எந்த அளவுக்குத் தண்ணீர் அருந்துகிறீர்களோ அந்த அளவுக்கு உடலின் ஆரோக்கியம் மேம்படும், கொழுப்பின் தீவிரம் குறையும்.

3. தூக்கம்:

சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுதல் அவசியம். இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவது என்ற வாழ்கை முறை ஆரோக்கியமானது அல்ல. தினமும் 6 - 8 மணி நேரம் தூங்குவது அவசியம். சரியான தூக்கம் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தும், கொழுப்பைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்காற்றும்.

Sleep
Sleep
Photo by Isabella and Louisa Fischer on Unsplash

4. உடற்பயிற்சி:

எடை குறைப்பில் முக்கியப் பங்காற்றும் உடற்பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. உடலில் உள்ள எடையைக் குறைத்தாலே முகத்தில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும். என்றாலும், முகத்துக்கான சில பிரத்யேகப் பயிற்சிகள் கீழே.

5. முகத்திற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்:

பின்வரும் முகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்....

* லிப் புல் பயிற்சி(Lip pull exercise)
- தலையை நேராக வைத்துக் கொண்டு, தாடை தசை இறுக்கமாகும் வரை கீழ் உதட்டைப் பிதுக்குவதுபோல செய்து, 15 முதல் 20 நொடிகள் அப்படியே வைத்திருக்கவும். இதேபோன்று 15 முறை செய்யவும். இதனால் கீழ்த் தாடையும், கன்ன சதையும் குறையும்.

* சின் லிஃப்ட் பயிற்சி (Chin Lift Exercise)

- நேராக நின்று, தலையை மேல்நோக்கி அண்ணாந்து பார்க்கவும். பின்னர், முத்தம் கொடுப்பதை போன்று இதழ்களைக் குவித்து வைத்திருக்கவும். இப்படியே 15 நொடிகள் இருக்கவும். இதனை 10 - 15 முறை செய்யவும். இதனால் தாடை தசைகள் இறுக்கமாகும். கொழுப்பு குறையும்.

* ஃபிஷ் லிப்பயிற்சி (Fish lip exercise)

- நேராக நின்று, தலையை நேராக வைத்துக்கொள்ளவும். இரண்டு பக்க கன்னங்களையும் உள் இழுத்து மடித்து, உதட்டை மீன் வடிவில் வைத்துக்கொள்ளவும். 15 முதல் 20 நொடிகளுக்கு அப்படியே இருக்கவும். இதேபோன்று 20 முறை செய்யவும்.

தினமும் இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால் முகத்தில் சேர்ந்த கொழுப்பு குறையும்.