Published:Updated:

How to: சிறிய தீக்காயத் தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to remove burn marks?

Burn marks (Representational Image)
News
Burn marks (Representational Image) ( Photo by Karolina Grabowska from Pexels )

சமையல் செய்யும்போதோ, ஏதாவது எதிர்பாராத விபத்தின்போதோ உடம்பில் ஏற்படும் சிறு தீக்காயத்தின் தழும்பு, சில நேரக்களில் நீங்காமல் தங்கிவிடும். அதைச் சரிசெய்ய பலரும் லேசர் சிகிச்சை, கிரீம்கள் எனப் பலவற்றை நாடுகின்றனர்.

Published:Updated:

How to: சிறிய தீக்காயத் தழும்புகளை சரிசெய்வது எப்படி? | How to remove burn marks?

சமையல் செய்யும்போதோ, ஏதாவது எதிர்பாராத விபத்தின்போதோ உடம்பில் ஏற்படும் சிறு தீக்காயத்தின் தழும்பு, சில நேரக்களில் நீங்காமல் தங்கிவிடும். அதைச் சரிசெய்ய பலரும் லேசர் சிகிச்சை, கிரீம்கள் எனப் பலவற்றை நாடுகின்றனர்.

Burn marks (Representational Image)
News
Burn marks (Representational Image) ( Photo by Karolina Grabowska from Pexels )

சமையல் செய்யும்போதோ, ஏதாவது எதிர்பாராத விபத்தின் போதோ உடம்பில் ஏற்படும் சிறு தீக்காயத்தின் தழும்பு, சில நேரங்களில் நீங்காமல் தங்கிவிடும். அதைச் சரிசெய்ய பலரும் லேசர் சிகிச்சை, கிரீம்கள் எனப் பலவற்றை நாடுகின்றனர். வீட்டில் இருக்கும் சில பொருள்களைப் பயன்படுத்தி இந்தத் தீக்காய தழும்புகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள் இங்க...

Burn marks (Representational Image)
Burn marks (Representational Image)
Photo by Karolina Grabowska from Pexels

1. உருளைக்கிழங்கு:

- உருளைக்கிழங்கில் உள்ள நொதிக்கு, இயற்கையாகவே பிளீச் பண்பு உள்ளது. இதைக் கொண்டு தீக்காயத் தழும்பை சரிசெய்யலாம். தினமும் ஓர் உருளைக்கிழங்கை எடுத்து, மெலிதாக வெட்டி தீக்காயத் தழும்பு மீது மெதுவாகத் தேய்க்கவும். கிழங்கிலிருந்து வரும் சாறு, சிறிய தீக்காய தழும்பை சிறிது சிறிதாக நீக்கும். தினமும் மூன்று முறை இது போன்று செய்யவும்.

2. பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

- பாதாம் எண்ணெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளன. இந்த எண்ணெய் இயல்பாகவே தழும்பை நீக்க வல்லது. எலுமிச்சை சாறு பிளீச்சிங் செய்ய உதவியாக இருக்கும்.

ஒரு கிண்ணத்தில் மூன்று, நான்கு துளிகள் பாதாம் எண்ணெயை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு, மூன்று துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். அந்தக் கலவையை தழும்புகளின் மேல் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யவும். தினமும் இரண்டு முறை இதேபோன்று செய்யவும். தழும்புகள் குறையும்.

குறிப்பு: தீக்காயங்கள் முழுமையாகக் குணமடைந்த பின்னரே இந்த முறையைப் பின்பற்ற வேண்டும்.

வெந்தயம்
வெந்தயம்

3. வெந்தயம்:

- வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் மட்டுமன்றி, மற்ற தழும்புகளில் இருந்து விடுபடவும் உதவும். வெந்தயத்தை அரை கப் எடுத்துக்கொண்டு முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், அதை ஒரு மிருதுவான பேஸ்ட்டாக அரைக்கவும். இதை தழும்பில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். தினமும் இரண்டு முறை இதைச் செய்ய வேண்டும்.

4. தேன்:

- தேனில் இருக்கும் சத்துகளால், பெரும்பான்மையான சருமப் பிரச்னைகளுக்கு நாம் தேனைப் பயன்படுத்துகிறோம். இதில் இயல்பாகவே இருக்கும் ஈரப்பதம் தழும்புகளை நீக்குவதற்கு மிக உதவியாக இருக்கும். தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பில் தினமும் தேனை தடவி வர தழும்பு மறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை
கற்றாழை

5. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழையின் வெளிப்புற அடுக்கை அகற்றி, இலையின் உட்புறத்தில் இருக்கும் ஜெல்லை எடுக்கவும்.
ஜெல்லை தோலில் மசாஜ் செய்து 20 - 40 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு தண்ணீரில் கழுவவும். கூடவே தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதன் மூலமும் தழும்புகள் குறைய வாய்ப்புள்ளது.

மேற்கூறிய வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் தழும்புகள் மறைவதைப் பார்க்க முடியும். மிக மெதுவாகத்தான் குறையும் என்றாலும், மிக இயற்கையான, எளிய முறையில் வீட்டிலேயே இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது சிறந்ததாகும்.