Published:Updated:

How to: இயற்கை முறையில் முகத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி? | How to remove sun tan naturally?

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்க வழி தேடுவோருக்கும், அதிக விலை கொடுத்து பியூட்டி பேக் வாங்க வேண்டுமா என யோசிப்பவர்களுக்கும் இரண்டு எளிய ஹோம் மேடு பேக்குகள் இங்கே...

Published:Updated:

How to: இயற்கை முறையில் முகத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி? | How to remove sun tan naturally?

வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்க வழி தேடுவோருக்கும், அதிக விலை கொடுத்து பியூட்டி பேக் வாங்க வேண்டுமா என யோசிப்பவர்களுக்கும் இரண்டு எளிய ஹோம் மேடு பேக்குகள் இங்கே...

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்க வழி தேடுவோருக்கும், சன் டான் (Sun tan) நீக்க அதிக விலை கொடுத்து பியூட்டி பேக் வாங்க வேண்டுமா என யோசிப்பவர் களுக்கும், எளிய முறையில் முகத்தில் உள்ள கருமைகளை நீக்க வழிமுறைகள் சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. சன் டான் நீக்க அவர் பரிந்துரைக்கும் இரண்டு ஹோம் மேடு பியூட்டி பேக்குகள் இங்கே...

பியூட்டி பேக் 1:

தேவையான பொருள்கள்:

  • மேல்தோல் நீக்கிய தக்காளி

  • கெட்டியான தயிர்

  • எலுமிச்சை சாறு (சிறுதுளி)

  • தேன் (10 சொட்டு)

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸில் அடித்து பேக் ஆக செய்துகொள்ளவும்.

தெரபிஸ்ட் வசுந்தரா
தெரபிஸ்ட் வசுந்தரா

இந்த பேஸ்ட்டை ஒரு Tan Brush பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்யவும். அப்ளை செய்யும்போது கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேலாகவும், கன்னத்திலிருந்து காதுக்கும், வாய் பகுதியிலிருந்து காதுக்கும் எனப் போட வேண்டும். மூக்கின் மேல் போடும்போது மட்டும் மேலிருந்து கீழாகப் போட வேண்டும். பேக்கை 15 நிமிடம் வரை காயவிட்டு பின் முகத்தைக் கழுவினால் முகம் மிகவும் பிரகாசமாகவும் பொலிவாகவும் இருக்கும்.

பியூட்டி பேக் 2:

தேவையான பொருள்கள்:

  • முல்தானி மட்டி

  • அரிசி மாவு

  • கஸ்தூரி மஞ்சள் (ஒரு சிட்டிகை)

  • அதிமதுரம் (ஒரு சிட்டிகை)

  • பன்னீர்

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். முகத்தில் அப்ளை செய்யும்போது, முன்னர் சொன்னதுபோல கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேலாகவும், கன்னத்திலிருந்து காதுக்கும், வாய் பகுதியிலிருந்து காதுக்கும் என போட வேண்டும். மூக்கின் மேல் போடும்போது மட்டும் மேலிருந்து கீழாகப் போட வேண்டும். உடலில் எந்தப் பகுதியில் கருமை உள்ளதோ, அங்கெல்லாம் அப்ளை செய்யலாம். மேலும், கழுத்து, முதுகு, கை என எங்கெல்லாம் கருமை நீங்க வேண்டுமோ அங்கெல்லாம் அப்ளை செய்துகொள்ளலாம்.

இந்த பேக் முகத்தை இறுக்கும் என்பதால் கண்ணுக்கு மேல் போடக்கூடாது. இந்த பேக் போடும்போது, வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைக்கலாம். 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை காத்திருந்து கழுவினால் முகம் மிகவும் அழகாக இருக்கும். முகத்தில் இருந்த கருமை நீங்கிவிடும்.

- வைஷ்ணவி