Published:Updated:

How to: மேல் பாதத்தில் படியும் கருமையை நீக்குவது எப்படி? | How to remove tan from feet?

Tan Feet
News
Tan Feet ( Image by PublicDomainPictures from Pixabay )

நம் உடலில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய பாகம் பாதம்தான் என்பதால் அதனை பராமரிப்பது முக்கியமானது. மிக எளிதாக, வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே...

Published:Updated:

How to: மேல் பாதத்தில் படியும் கருமையை நீக்குவது எப்படி? | How to remove tan from feet?

நம் உடலில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய பாகம் பாதம்தான் என்பதால் அதனை பராமரிப்பது முக்கியமானது. மிக எளிதாக, வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே...

Tan Feet
News
Tan Feet ( Image by PublicDomainPictures from Pixabay )

முகம், கைகளில் சூரிய வெளிச்சத்தால் ஏற்பட்ட கருமையை நீக்குவது போல், கால்களில், முக்கியமாகப் பாதங்களில் ஏற்படும் கருமையை நீக்கவும் பலரும் வழி தேடிக்கொண்டிருப்பார்கள். நம் உடலில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய பாகம் பாதம்தான் என்பதால் அதனை பராமரிப்பது முக்கியமானது. மிக எளிதாக, வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே...

Tan Feet
Tan Feet
Pixabay

1.எலுமிச்சை சாறு, தேன் அல்லது சர்க்கரை

- ஒரு எலுமிச்சையின் சாற்றை எடுத்து, அதில் சிறிது தேனை சேர்த்துப் பாதங்களில் தடவி வைக்கவும். 30 நிமிடங்களுக்குப் பின் கழுவவும்.
- அல்லது, எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை சேர்த்து பாதங்களின் மேல் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

2. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாற்றை பெரும்பாலும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க பயன்படுத்துவார்கள். உருளைக்கிழங்கின் சாறு இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட்.

- பச்சையான உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து, அதை நேரடியாக மேல் பாதத்தில் தடவவும். 10-12 நிமிடங்கள் வைத்திருந்து, காய்ந்தவுடன் கழுவவும். கருமை நீங்கும்.

தேன்
தேன்

3. தேன் மற்றும் பப்பாளி

பப்பாளியில் இயற்கையான என்சைம்கள் நிறைந்துள்ளன. மேலும் தேன் ஓர் இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை மென்மையாக்க வல்லது; ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. சருமத்தில் உள்ள ஃப்ரீ ரேடிக்கிள்களை நீக்கும். பப்பாளி, தேன் பேக் கொண்டு எளிதாக பேக் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
- பழுத்த பப்பாளி 4-5 க்யூப்ஸ் எடுத்துக் கொள்ளவும்.

- அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, ஒரு ஸ்பூன் கொண்டு மசித்து பேஸ்ட் போல கலக்கவும்.
- இந்த பேஸ்ட்டை மேல் பாதம் முழுவதும் தடவி 20-30 நிமிடங்களுக்கு உலரவிட்டு, பிறகு தண்ணீரில் கழுவவும்.

4. வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காய் சாறு வெயிலில் கறுப்பாகும் சருமத்திற்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.

- ஒரு வெள்ளரிக்காயை துண்டாக்கி, சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அதை காட்டனை பயன்படுத்தி பாதத்தின் மேல் பகுதியில் தடவவும். சில நிமிடங்கள் உலரவிட்டு பின்பு கழுவவும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி
தக்காளி

5. தக்காளி மற்றும் தயிர்:

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சருமத்தை பொலிவாக்க உதவும். மேலும் தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.
- தக்காளியை பச்சையாக எடுத்து தோலை நீக்கவும். அதனுடன் 1-2 டீஸ்பூன் தயிரை சேர்த்துக் கலக்கவும். இந்த பேஸ்ட்டை பாதத்தின் மேற் பகுதியில் நன்றாகத் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
மேற்கூறிய ஏதேனும் ஒரு முறையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பட்சத்தில் மேல் பாதத்தில் ஏற்படும் கருமை நீங்கும்.