Published:Updated:

How to: முகத்தில் தேவையில்லாத ரோமங்களை அகற்றுவது எப்படி? | How to Remove Upper Lip Hair Naturally?

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

எந்த க்ரீம் போட்டாலும், வேக்ஸிங் செய்தாலும் நிரந்தரத் தீர்வாக இல்லாமல் மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ரோமத்தை நிரந்தரமாக நீக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான வழிமுறைகளைக் கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

Published:Updated:

How to: முகத்தில் தேவையில்லாத ரோமங்களை அகற்றுவது எப்படி? | How to Remove Upper Lip Hair Naturally?

எந்த க்ரீம் போட்டாலும், வேக்ஸிங் செய்தாலும் நிரந்தரத் தீர்வாக இல்லாமல் மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ரோமத்தை நிரந்தரமாக நீக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான வழிமுறைகளைக் கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

Skin care (Representational Image)
News
Skin care (Representational Image) ( Pixabay )

பெண்களுக்குத் தங்கள் தலையில் வளரும் கேசத்தை அழகாகப் பராமரிப்பது ஒரு வேலை என்றால், உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் ரோமங்களை அகற்றுவது இன்னொரு வேலை. அதிலும் குறிப்பாக தாடை, அப்பர் லிப் என முகத்தில் வளரும் ரோமத்தை அகற்றுவது என்பது பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. எந்த க்ரீம் போட்டாலும், வேக்ஸிங் செய்தாலும் நிரந்தரத் தீர்வாக இல்லாமல் மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ரோமத்தை நிரந்தரமாக நீக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான வழிமுறைகளைக் கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

வசுந்தரா
வசுந்தரா

``முகத்தில் இருக்கும் ரோமத்தை நீக்க, வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பேக் செய்ய கீழ்க்காணும் பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்...

பேக் செய்ய தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
முல்தானிமட்டி - 1 டீஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பப்பாளி- 1 டீஸ்பூன்

பேக் செய்ய தேவையான பொருட்கள்
பேக் செய்ய தேவையான பொருட்கள்

மேலே சொன்ன பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டியாக பேஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்பதால், இவற்றுடன் தண்ணீரோ, வேறு எந்தப் பொருளோ சேர்க்கத் தேவையில்லை. அந்தக் கெட்டியான பேக்கை உதட்டின் மேல்பகுதியிலும், தாடைப்பகுதியிலும் அப்ளை செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் சென்ற பின்னர், பேக்கை நீர்கொண்டு ஈரமாக்கி, வட்டமாக (circular) சில நிமிடங்கள் மசாஜ் செய்திட வேண்டும். தொடர்ந்து சில நிமிடங்கள் அப்படியே விடலாம். பின் காட்டன் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு நன்றாகக் கழுவி விடலாம்.

தினமும் செய்தால் உடனே பலன் கிடைக்குமா?!

இந்த பேக்கை தினமும் அப்ளை செய்து வர வேண்டும். தினமும் செய்து வந்தாலும் உடனடியாக பலன் இருக்காது. சிலருக்கு ஒரு மாதத்திலோ, இரண்டு மாதங்களிலோ ரிசல்ட் தெரியும். சிலருக்கு இன்னும் நாள்கள் தேவைப்படும். ஆனால் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டிலேயே தேவையில்லாத ரோமங்களை அகற்றிவிட முடியும்.

கவனிக்க...

இந்த பேக்கை நெற்றி, கன்னங்களின் ஓரம் போன்ற மற்ற பகுதிகளில் பயன்படுத்தும் போது பப்பாளி சாறு, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் அளவை பாதியாகக் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை தினமும் அப்ளை செய்யலாம் என்றாலும், அப்ளை செய்து அதிக நேரம் விட வேண்டாம். முக்கியமாக இந்த பேக்கை அப்ளை செய்த பின் ரொம்ப அழுத்தம் கொடுத்துத் தேய்க்க வேண்டாம், ஜென்டில் மசாஜ் போதும்.

கை, காலுக்கும்...

கை, கால் பகுதிகளிலும், அக்குள் பகுதிகளிலும் வளரும் தேவையில்லாத ரோமத்தை அகற்றவும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். ஆனால் பொறுமையாகத் தொடர்ந்து தினமும் செய்திட வேண்டும். தொடர்ச்சி, நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்'' என்றார்