Published:Updated:

How to: பற்களில் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி? | How to remove yellow stains from teeth?

Teeth (Representational Image)
News
Teeth (Representational Image) ( Photo by Shiny Diamond from Pexels )

``பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் மஞ்சள் கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம்’’ என்கிறார் பல் மருத்துவர் ஞானம் செந்தில்குமரன். பற்களில் ஏற்படும் கறைகளைப் போக்கும் வழிகளைச் சொல்கிறார் அவர்.

``நம் புற அழகைத் தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பல். பற்களில் கறை ஏற்பட்டால், அது முகப்பொலிவை பாதிக்கும். பற்களில் கறை படிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் மஞ்சள் கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம்’’ என்கிறார் பல் மருத்துவர் ஞானம் செந்தில்குமரன். பற்களில் ஏற்படும் கறைகளைப் போக்கும் வழிகளைச் சொல்கிறார் அவர்.

ஞானம் செந்தில்குமரன், பல் மருத்துவர்
ஞானம் செந்தில்குமரன், பல் மருத்துவர்

``பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.

* நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

* காலையில் நல்லெண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பது (Oil Pulling) நல்லது.

* உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

* சாப்பிட்டு முடித்ததும், `மவுத் வாஷ்’ பயன்படுத்துவதன் மூலம் கறையைத் தவிர்க்கலாம். தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது, மவுத் வாஷைவிடச் சிறந்தது.

Teeth (Representational Image)
Teeth (Representational Image)
Photo by Shiny Diamond from Pexels

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எலுமிச்சை - உப்பு கலவை, திரிபலா சூரண உபயோகம், ஆயில் புல்லிங் போன்றவற்றை அளவுக்கு மீறிச் செய்தால், பற்களில் சென்சிட்டிவ் தன்மை அதிகரித்து, கூச்ச உணர்வு ஏற்படும். எனவே, அளவாகப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வழிமுறைகள் மஞ்சள் கறையை நீக்கக் கைகொடுக்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி, செயற்கையாகச் சுத்தம் செய்து கொள்ளவும்'' என்றார்.